Asianet News TamilAsianet News Tamil

சீனாவை காட்டிலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா...!! அலறும் உலக சுகாதார நிறுவனம்..!!

குறிப்பாக தென்கொரியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில்  ஐஸ்லாந்து போர்ச்சுக்கல் , ஜோர்டான் ,  துனிசியா,  அர்மோனியா,  லாட்ஸ்வியா , செனகல்,  உள்ளிட்ட 7 நாடுகளில் நேற்று முதல் புதிதாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது .  

corona virus very speedily spreading other country's then china
Author
Delhi, First Published Mar 3, 2020, 3:33 PM IST

சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக உலக  சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது . அதுமட்டுமல்லாது இதுவரை மனித சமூகம் கண்டிராத கொடிய வகை வைரஸாக இது உள்ளதாகவும் அந்த  நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்  கேப்ரியேசூஸ் தெரிவித்துள்ளார் .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின்  ஹூபெய்  மகாணத்தின் வுகானில்  தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும்  பரவி உள்ளது .  இதில் சீனாவில் மட்டும் 2800க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர்.  சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  இந்த வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

corona virus very speedily spreading other country's then china

இந்நிலையில்  சீனாவை கடந்து  சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது .  உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு  உயிரிழந்துள்ளனர் . சுமார்  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  ஈரான் ,  தென்கொரியா ,  இத்தாலி ,  ஜப்பான் ,  அமெரிக்கா , ஆஸ்திரேலியா ,  உள்ளிட்ட  நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர் .  கடந்த 24 மணி நேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது .  கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அளவிற்கு  வேகமாக  பரவுவதால் ,  உலக அளவில் கோரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்   தென்கொரியா ,  இத்தாலி ,  ஈரான் ஜப்பான் ,  ஆகிய நாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது .  இதனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது . 

corona virus very speedily spreading other country's then china

சீனாவை விட மற்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன .  குறிப்பாக தென்கொரியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில்  ஐஸ்லாந்து போர்ச்சுக்கல் ,  ஜோர்டான் ,  துனிசியா,  அர்மோனியா,  லாட்ஸ்வியா , செனகல், உள்ளிட்ட 7 நாடுகளில் நேற்று முதல் புதிதாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது .  இதற்கு முன்னர் இந்த வைரஸை நாம் எதிர் கொள்ளாததால் தற்போது உலக அளவில் பரவி வரும் இந்த வைரஸின்  நெருக்கடியை சமாளிப்பது கையாள்வது மிக சிரமமாக உள்ளது . ஆனாலும் இந்த வைரஸை கண்டு நாம் அஞ்சி ஒதுங்கக் கூடாது .  அதற்கு எதிராக செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும் என கூறியுள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios