ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களை தெறிக்கவிட்ட கொரோனா..!! 140 டிகிரி வெப்ப நிலையிலும் அசராமல் தாக்குபிடித்த கொடூரம்
குரங்கின் சிறுநீரக செல்களை சுமார் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கொண்ட அறையில் வைத்தனர் . பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த குரங்கின் சிறுநீரக செல்களை எடுத்து ஆராய்ந்ததில் அந்த வைரஸ் அழியாமல் அப்படியே உயிருடன் இருந்தது தெரியவந்தது .
கொரோனா வைரஸ் மிக கடுமையான வெப்ப நிலையிலும் உயிர்வாழ கூடியது என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் திறனை ஆராய நடத்தப்பட்ட சோதனையில் இந்த திடுக் தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதுவரை உலக அளவில் சுமார் 20 லட்சத்து 45 ஆயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் . சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் , ஆனாலும் இந்த வைரஸ் உலக அளவில் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . அமெரிக்கா, ஸ்பெயின் ,த்தாலி, பிரான்ஸ் ,ஜெர்மனி, பிரிட்டன் , துருக்கி , உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .
இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன , இந்நிலையில் கொரோனா தொடர்பாக பல ஆராய்ச்சிகள் உலக அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன , அதாவது இந்த வைரஸின் தன்மை என்ன.? இது எந்த மாதிரியான இயல்புநிலை கொண்டது, இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏதாவது உள்ளனவா , இதை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதாவது தென்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறுவகையான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன , அதாவது இந்த வைரஸ் அதிக சூரிய ஒளியில் தாக்குப் பிடிக்காது என்றும் இது அதிக வெப்பத்தில் அழிந்துவிடும் என்றும் அதேபோல கோடைக்கால வானிலையில் இந்த வைரஸ் அதிகம் பேருக்கு பரவாது என்றும், கோடையில் எளிதில் கட்டுபடுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதே போல சூரிய ஒளி , ஈரப்பதம் , அதிக வெப்பநிலை போன்ற வற்றில் வைரஸ் நீண்டகாலம் வாழாது எனவும் செய்திகள் உலா வருகின்றன . ஆனால் இதுபோன்ற தகவல்களுக்கு எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதுவரையில் இது தொடர்பான எந்த ஒரு ஆராய்ச்சியும் நடைபெறவும் இல்லை. இது ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்களாகவே இவைகள் இருந்து வருகின்றன. ஆனாலும் இந்த கருத்துகள் பொது மக்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது. இப்படிபட்ட சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் எந்த அளவிற்கு வெப்பத்தை தாக்குபிடிக்கக்கூடியதாக உள்ளது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பச்சைநிற வகை குரங்கின் சிறுநீரக செல்களை சுமார் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கொண்ட அறையில் வைத்தனர் .
பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த குரங்கின் சிறுநீரக செல்களை எடுத்து ஆராய்ந்ததில் அந்த வைரஸ் அழியாமல் அப்படியே உயிருடன் இருந்தது தெரியவந்தது .பின்னர் அடுத்தகட்ட சோதனையாக , சுத்தமான ஆய்வக சூழலிலும் , அழுக்கு படிந்த சூழலிலும் வைரஸின் வெப்ப தாக்குபிடிக்கும் திறனை அவர்கள் சோதித்தனர், அதற்காக சுமார் 140 டிகிரி வெப்பமூட்டப்பட்ட அறையில் ஒரு மணி நேரம் வரை வைரஸ் கிருமியை வைத்து பரிசோதித்தனர், பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த வைரஸ் செல்களை ஆராய்ந்ததில் அப்போதும் அந்த கிருமிகள் அப்படியே உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . பின்னர் வைரஸை கொள்ள 197 .6 டிகிரி வெப்ப நிலையில் 15 நிமிடங்கள் வைத்து ஆய்வு செய்தனர் , பின்னரே அது உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்,