60 நாடுகளுக்கு பரவிய கொரோனா, உச்சகட்டபீதியில் உலகம்...!! சினாவை கடந்து சர்வதேச அளவில் வெறியாட்டம்...!!
இதுவரை ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இதுவரை 79 ஆயிரத்து 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அது வேகமாக பரவி வருகிறது . இந்ந வைரசால் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 60-க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா மிக வேகமாக பரவி சீனா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 31 மாகாணங்களில் பரவிய வைரசால் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் . இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தினம் உயிரிழப்புகள் சீனாவில் அரங்கேறி வருகிறது . நாளொன்றுக்கு குறைந்தது 100 பேர் உயிரிழக்கின்றனர் .
இதில் அதிகபட்சமாக கடந்தமாதம் ஒரேநாளில் 258 பேர் பலியாகினர் . கடந்த மூன்று மாதகாலமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது அதேபோல் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கபடாததால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது . நிலைமை கைமீறிப் போன நிலையில் சில வாரங்களாக கொரோனாவின் வீரியம் சீனாவில் குறைந்துள்ளது . வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது , உயிரிழப்பும் ஒரளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சீனாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 47 பேர் உயிரிழந்தனர் . இதுவரை ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இதுவரை 79 ஆயிரத்து 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அதே நேரத்தில் 39 ஆயிரம் பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் . கடந்த சில நாட்களில் முன்னாள் 37 நாடுகளுக்கு பரவியிருந்த வைரஸ் மேலும் 23 நாடுகளுக்கு பரவி உள்ளது . இதனால் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது . சீனா , ஜப்பான் , ஹாங்காங் சிங்கப்பூர் , தாய்லாந்து , தென்கொரியா , தைவான் , பிலிப்பைன்ஸ் , வியட்நாம் , மலேசியா , டென்மார்க் , ஆஸ்திரேலியா , ஜார்ஜியா , எகிப்து , இந்தியா , நேபாளம் கம்போடியா , ஆப்கானிஸ்தான் , இஸ்ரேல் , லெபனான் உள்ளிட்ட 60 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.