அட கடவுளே இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோகிறதா..?? தலையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்..!!
தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் தடுப்பூசிகளின் செயல்திறன் அடிக்கடி தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த வைரஸிடம் எந்த அளவிற்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே
கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களால் அந்த வைரசுக்கு துல்லியமான தடுப்பூசி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . அதே நேரத்தில் அதன் பரவும் தன்மை மேலும் வேகமெடுப்பதற்கும் அது வழிவகுக்கலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர் . உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரசுக்கு மருந்து கண்டு பிடிப்பதில் ஆயிரக்கனக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தங்களை அற்பணித்துக் கொண்டுள்ளனர். இந் நிலையில் இந்த கொரோனா குறித்து புதிய அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது , அதாவது இந்த வைரஸ் அதன் தன்மையில் இருந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் அது. அதவாது இந்த வைரஸ் மரபுரீதியாக உருமாறிக்கொண்டே இருக்கிறது என்பதே இப்போது ஒட்டு மொத்த விஞ்ஞானிகளின் கவலை. தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸில் திடீர் பிறழ்வு அதாவது மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர் .
அதுமட்டுமின்றி அந்த வைரஸில் சில பகுதிகள் காணமல்போய் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர் . இது மருந்து ஆராய்ச்சியில் எதிரொலிக்க கூடுமென விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் எய்ட்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தின் இயக்குநரும் பேராசிரியருமான மான்டெபியோரி இந்த வைரஸ் சீனா அல்லது ஐரோப்பாவிலோ முதன்முதலில் தோன்றி இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது, ஆனால் இந்த வைரஸ் தொற்றிய ஒரு சில நாட்களிலிலேயே சார்க் கோவிட்- 2 வின் இரண்டாவது பிறழ்வு ஏற்பட்டுள்ளது, அது ஜனவரி மாதத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதனால் அந்த வைரஸ் பரவுவதில் வேகமெடுக்க தொடங்கியதால் அது அசல் வைரஸைவிட அதிவேகமாக பரவி இருக்கக்கூடும் எனவும் இந்த இரண்டாவது பிறழ்வே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மாநிலங்களிலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது .
இந்த வைரஸ் குறித்து சுமார் 6 ஆயிரம் பேரின் மரபணுக்களை பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தொற்று நோய்களின் ஆரம்பத்தில் இந்த வைரஸில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மிகவும் அபரிதமானது என வியப்படைந்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்த பேராசிரியர் மான்டெபியோரி, தற்போது இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று , இதை கட்டுப்படுத்துவதற்கு வலுவான முயற்சிகளை ஆராய வேண்டும் புதிய பிறழ்வு ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் கடந்த சில மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது , தற்போது எடுக்கப்பட்டு வரும் சமூக நடவடிக்கைகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது . அதேபோல் இந்த வைரஸால் ஏற்படும் புதிய பிறழ்வு மனித உயிரணுக்களை வேகமாக ஆக்கிரமிக்கவும் நோய்த்தொற்றுக்கு பின்னர் நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக சீர்குலைக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அல்லது இரண்டாவது தொற்று அலையை அது ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வைரசின் ஜி-ஸ்ட்ரெய்ன் குறித்து கேட்டபோது, ஆஸ்திரேலியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி,
வைரஸின் புதிய பிறழ்வுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் குறிப்பாக மிக அதிக அளவில் பரவக்கூடிய , அதுவும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவத் கூடிய இந்த வகை வைரஸ்களில் பொதுவாக பிறழ்வு இயல்பாக நிகழக்கூடிய விஷயமே என அவர் கூறியுள்ளார் . அதே நேரத்தில் காலப்போக்கில் இது வேகமாக பரவக்கூடியதாகவோ அல்லது குறைவாக பரவ கூடியதாகவோ மாறலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஆக, தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் தடுப்பூசிகளின் செயல்திறன் அடிக்கடி தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த வைரஸிடம் எந்த அளவிற்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த வைரஸ்கள் பிறழ்வு அடையக் கூடியதாக அதாவது தொடர்ந்து மாற்றமடைவதாக இருக்கும் பட்சத்தில் எப்படி எச் ஐ வி எனப்படும் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகிறார்களோ அதேபோல கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு விஞ்ஞானிகள் தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.