கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவது இல்லை,  சுவாச நீர் துளிகள் மூலமாக பரவுகிறது என உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன .  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது .  சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன . இந்நிலையில் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 

சமீபத்தில் இது குறித்து  தெரிவித்திருந்த சீன ஆராய்ச்சியாளர்  ஒருவர்,  இந்த வைரஸ் காற்றின் மூலமாக பரவுகிறது காற்றுவெளியில் சுமார் 20 அடி தூரம் வரை இந்த வைரஸ் பயணிக்க கூடுமென அவர் எச்சரித்திருந்தார் .  அவரின் இந்தக் கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன்,  இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் ஏற்பட்டது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவது அல்ல சுவாச நீர் துளிகளால் பரவுகிறது . குறிப்பாக  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு அது பரவுகிறது.  இந்த வைரஸ் காற்றில் நீண்டநேரம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.  

குறிப்பாக சுவாச நோய் தொற்றுகள் வெவ்வேறு அளவிலான நீர்த்துளிகள் மூலம் பரவும் என்றும் ,   உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  இருமல் அல்லது தும்மலின்போதும்  நேய்தொற்று  அறிகுறிகளை கொண்ட ஒரு நபருடன் நீங்கள் ஒரு மீட்டருக்கும் நெருங்கி தொடர்பு வைத்துக் கொள்ளும்போது இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது இந்த வைரஸ் பரவுவதற்கான நீர் துளிகளின் அளவு 5 முதல் 10 மைக்ரான் ஆக இருக்கும்போது அது உடலில் எளிதில் பரவுகிறது,  அதேபோல் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் பரவும் எனவும் உலகச் சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது .