பல நாட்கள் காத்திருக்க வேண்டாம்! 45 நிமிடத்தில் கொரோனா உள்ளதா என உறுதி செய்து விடலாம்! வருகிறது புதிய கருவி!
இந்தியா உட்பட, பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படாமல் சந்தேகத்தின் பெயரில் மட்டும் பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் கண்காணிப்பில் தனிமை படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு டெஸ்ட், எடுத்த பிறகு தான் கொரோனா தாக்கம் உள்ளதா? இல்லையா? என மருத்துவர்கள் உறுதி படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக கொரோனா உள்ளதா என்பதை கண்டு பிடிக்க எடுக்கப்படும் சென்டர்லைட் டெஸ்டின் ரிசல்ட் வர, பல நாட்கள் ஆகிறது. உறுதியான தகவல் வந்த பின்பே, நோயாளிகள் மன நிம்மதி அடைகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க 48 மணிநேரத்தில், கொரோனா உள்ளதா ... இல்லையா என்பதை கண்டறியும், கருவியை கண்டு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள், கொரோனா உள்ளதா என உறுதி செய்வதற்கு பல நாட்கள் காத்திருக்க தேவை இல்லை. மிக விரைவாகவே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா, இல்லையா என தெரிந்துவிடும்.
இதனை அமெரிக்கா அடுத்த வாரத்தில் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சப்பிலே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 'cephied' என்கிற கலிபோனியா கம்பெனி இதை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற நாடுகளுக்கும் இந்த டெக்னாலஜி விரைவாக கிடைத்து கருவிகள் தயாராக மட்டுமே இரண்டு மாதம் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது அந்நாட்டு தலைவர்களை அச்சமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.