கொரோனாவில் இருந்து விடுபட்டார் இளவரசர் சார்லஸ்...!! ஸ்காட்லாந்து அந்தபுரத்தில் மனைவியுடன் ஒய்வு..!!
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கிளாரன்ஸ் அவுஸ் செய்தி தொடர்பாளர் , இளவரசர் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் இளவரசர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார் . அவருக்கு லேசான வைரஸ் பாதிப்பு இருக்கிறது ஆனால் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசர் சார்லஸ் சுய தனிமைப்படுத்துதலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் நோய் தொற்றிலிருந்து அவர் குணமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அது ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்த பாகுபாடுமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது இந்நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பத்தையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை . இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மார்ச் 12ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் .
இந்நிலையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆவார் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன , 71 வயதான சார்லஸ் ஏற்கனவே அரசு அறிவித்த போது கட்டுப்பாட்டை பின்பற்றி தொடர்ந்து 14 நாட்களுக்கு அவர் தனிமைப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இளவரசருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டவுடன் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைப்பட்டு இருப்பது தகவல் வெளியான நிலையில் இளவரசரை விட்டு பிரிந்த அவரது மனைவி கார்ன்வால் டச்சஸ் அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கிளாரன்ஸ் அவுஸ் செய்தி தொடர்பாளர் , இளவரசர் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் இளவரசர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார் . அவருக்கு லேசான வைரஸ் பாதிப்பு இருக்கிறது ஆனால் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
வழக்கம்போல வீட்டில் அவருக்கு பிடித்த சில வேலைகளை செய்து வருகிறார் . இந்நிலையில் அவரும் அவரது மனைவி கார்ன்வால் டச்சஸ் இருவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பதால் இப்போது இருவரும் ஸ்காட்லாந்து வீட்டில் தனியாக இருக்கிறார்கள் , இந்நிலையில் இளவரசருக்கு யாரிடம் இருந்து வைரஸ் பரவியது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இளவரசருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள அரண்மனையில் பொது விருதுகளுக்கான முதலீட்டு விழாவுக்குப் பிறகு இளவரசர் கடைசியாக ராணியைப் பார்த்தார் என்பது குறிப்பிடதக்கது.