அறிவியல் அல்ல... அரசியல் காரணங்களுக்காகவே ஊரடங்கு தளர்வு... 2 ஆண்டுகள் தொடரப்போகும் கொரோனா..!
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் இரண்டாவது அலையில் மேலும் அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் இரண்டாவது அலையில் மேலும் அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டெக்ஸாஸ் பல்கலைகழக வைரஸ் ஆய்வாளர் பெஞ்சமின் நியூமன் கூறுகையில், ‘’1918 மற்றும் 1919 ல் ஏற்பட்ட புளு காய்ச்சல் மற்றும் 2009 ல் ஏற்பட்ட H1N1 நோய் தொற்றின் பரவல் விபரங்களை பயன்படுத்தி இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்த போதிலும் பொருளாதார இழப்புகளையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சரி செய்ய வேறு வழியின்றி பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதில் உள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான். எந்த அறிவியல் காரணமும் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனமும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.இல்லை எனில் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவில் வேகமாக பரவும்’’ என எச்சரித்துள்ளார்.
தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளுக்கான மையம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்வது குறித்து மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளது. முதல் கணிப்பின்படி, கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இந்த ஆண்டு முடியும் வரை கண்டுபிடிக்க இயலாது. அதனால் இரண்டாவது அலை தொற்று இந்த ஆண்டு சிறிய அளவில் தொடங்கி அடுத்த ஆண்டு முடியும் வரை தொடர்ச்சியாக இருக்கும். இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
இரண்டாவது கருதுகோளின் படி முதல் அலை தொற்றை அடுத்து மெதுவான தொற்று இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது கணிப்பின்படி இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் அலை தொற்று பெரும் அளவில் ஏற்படும் என்றும் அடுத்த ஆண்டும் சிறிய அளவில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
1918 மற்றும் 1919 ல் ஏற்பட்ட புளு காய்ச்சல் மற்றும் 2009 ல் ஏற்பட்ட H1N1 நோய் தொற்றின் பரவல் விபரங்களை பயன் படுத்தி இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இதில் எந்த வாய்ப்பின் படி நோய் தொற்று தொடர்ந்தாலும் அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு நாம் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போரில்தான் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.