20 முதல் 40 வயதுள்ளவர்களால் கொரோனா வேகமாக பரவுகிறது..!! உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்...!!
உலக அளவில் 20 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் கொரோனா நோய்த் தொற்றை வேகமாகப் பரப்பி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் 20 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் கொரோனா நோய்த் தொற்றை வேகமாகப் பரப்பி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த தகவல் உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 7.83 லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் 62 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனாலும் இந்த வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதற்காக எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அதில் பலனில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆரம்பகட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகம் வயதானவர்களை தாக்குவதாக கூறப்பட்டு வந்தது, ஆனால் தற்போது இளம் வயதுள்ளவர்களை இந்த வைரஸ் தீவிரமாகத் தாக்கி வருகிறது. குறிப்பாக 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கும்போது, அது அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கான அறிகுறிகளும் அவர்களிடத்தில் தென்படுவதில்லை, ஆனால் அவர்கள் மூலம் இந்த வைரஸ் பலருக்கு பரவுகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் ஆபாயம் உள்ளது. அதாவது 20, 30, 40 வயதுகளில் உள்ளவர்களால் அதிக அளவில் இந்த வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பானில் 40 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவிலும் இதே நிலைதான் தொடர்கிறது. தொற்றால் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ள சமூகங்களுக்கு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு நம்மிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. பெரும்பாலும் அது குறைவாகவே உள்ளது. நியூசிலாந்து, வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளில் ஆரம்பத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது ஆனால் தற்போது அங்கு மீண்டும் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கொரோனா தோற்று பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஜேர்மன், சான்ஸ்லர், அங்கேலா, மோர்க்கெல் உள்ளிட்ட நாடுகளில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. எனவே அப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அந்தந்த நாடுகள் அறிவித்துள்ளன. அதேபோல் ஒன்றுக்கும மேற்பட்ட ஆட்களை கொண்ட அலுவலகங்களில் முகக்கவச பயன்பாடு கட்டாயமாக்கப் படுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தச் சட்டம் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாடு கூறியுள்ளது. இளம் வயதினரால் அதிகம் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது என்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.