ருத்ர தாண்டவம்..! மீண்டும் தொடங்கியது கொரோனா அலை.. பல நாடுகளில் அவசரநிலை..


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

corona increase in america

உலகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 8,15,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி பதிவாகிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 27 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

corona increase in america

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. க்டந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,839 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 52,986,307 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,37,671 பேர் கொரோனாவில் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 747 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அங்கு 1,154,386 பேர் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona increase in america

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பிரிட்டனில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. அங்கு 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவே 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்ற அளவுக்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.பிரிட்டனில் புதிதாக 1, 22,186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,47,857 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 137 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,961,369 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,782,066 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

corona increase in america

ரஷ்யாவில் 10,343,353 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 34,886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,02,269 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 998 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,180,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 860,705 பேர் தற்போது  கோரோனா சிகிச்சையில் உள்ளனர்.

பிரான்சில் 8,983,760 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 94,124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,22,462 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 177 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,752,717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 1,108,581 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

corona increase in america

இந்தியாவில் இதுவரை 415 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கபட்ட 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,779,815 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,79,520 பேர் கொரோனாவில் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 387 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் தற்போது 84,318 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios