சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரழிவை ஏற்படுத்திவருகிறது. உயிரிழப்புகள் மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகளவில் 28 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 லட்சத்து 30 ஆயிரம் பேரும் ஸ்பெய்னில் 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் இத்தாலியில் சுமார் 2 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், 780 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டிவிட்டது. 

கொரோனா பரவ ஆரம்பித்து 3 முதல் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதற்கு 3 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த ஒரு லட்சம் பேர் வெறும் 15 நாட்களில் உயிரிழந்துள்ளனர். அந்தளவிற்கு கொரோனா அதிவேகமாக பரவி, குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்ன் மற்றும் ஃப்ரான்ஸில் 22 ஆயிரத்துக்கு அதிகமானோரும் இத்தாலியில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா உருவான சீனாவில் 4600க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.