Asianet News TamilAsianet News Tamil

இத்தாலியை அலற விடும் கொரோனா..! பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது..!

சீனாவை விஞ்சி தற்போது இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 462 பேர் பலியாகி கொரோனா பலி எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41,000 ஆக உயர்ந்துள்ளது.

corona death toll raised in italy
Author
Italy, First Published Mar 20, 2020, 11:15 AM IST

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. சீனாவில் 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 10,035 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 2,44,979 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

corona death toll raised in italy

சீனாவை விஞ்சி தற்போது இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 462 பேர் பலியாகி கொரோனா பலி எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில் 1,284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!

corona death toll raised in italy

இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 28 பேரும், உத்தர பிரதேசத்தில் 18 பேரும், டெல்லியில் 16 பேரும், கர்நாடகாவில் 15 பேரும் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios