Asianet News TamilAsianet News Tamil

2 லட்சத்து 98 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது..! தொடரும் கொரோனாவின் வெறியாட்டம்..!

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 44,28,238 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,98,083 மக்கள் பலியாகியுள்ளனர். 24,71,195 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 45,920 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. 

corona death toll in world is nearer to 3 lakh
Author
America, First Published May 14, 2020, 7:52 AM IST

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்துள்ள போதும் உலகின் பிற நாடுகளில்  தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.

corona death toll in world is nearer to 3 lakh

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 44,28,238 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,98,083 மக்கள் பலியாகியுள்ளனர். 24,71,195 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 45,920 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளுக்கு அச்சத்தை கொடுத்து வந்தபோதும் அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் ஆறுதல் தரக்கூடியதாக இருக்கிறது.

corona death toll in world is nearer to 3 lakh

உலகம் முழுவதும் இதுவரை 16,58,960 மக்கள் கொரோனா வைரஸில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அவர்களை சுய தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி கொண்டிருக்கிறது. அங்கு  இதுவரை 14,30,348 மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 85,197 பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது. பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios