11,384 உயிர்களை குடித்து கோர தாண்டவம் ..! உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா..!
உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 384 பேர் கொரோனாவல் பலியாகி இருக்கின்றனர். இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா மற்ற நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்து 4,023 உயர்ந்திருக்கிறது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தாலி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் 1433 பேரும், ஸ்பெயினில் 1043 பேரும் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 384 பேர் கொரோனாவல் பலியாகி இருக்கின்றனர். இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 258 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 4 இந்தியர்களும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவரும் பலியான நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்திருக்கிறது.
உயிரை விட உரிமையே முக்கியம்..! ஊரடங்கு நாளிலும் தொடரப்போகும் ஷாகின்பாக் போராட்டம்..!
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாளை ஒட்டுமொத்த தேசத்திலும் சுய ஊரடங்கு அமல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளிவர வேண்டாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மக்களுக்கு பயண கட்டுப்பாடுகள் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் உட்பட பல அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.
ஒரே நாளில் 627 பேர் பலி..! இத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா..!