1.54 லட்சம் உயிர்களை காவு வாங்கி கோர தாண்டவம்..! உலகை புரட்டிபோட்ட கொடூர கொரோனா..!
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 22,50,432 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இன்று வரையில் 1,54,247 மக்கள் பலியாகியுள்ளனர்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுக்குள் வந்து நாட்டின் நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. எனினும் உலகின் பிற நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 22,50,432 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இன்று வரையில் 1,54,247 மக்கள் தங்கள் பலியாகியுள்ளனர். 16 லட்சம் மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளுக்கு அச்சத்தை கொடுத்து வந்தபோதும் அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் ஆறுதல் தரக்கூடியதாக இருக்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 5,71,577 மக்கள் கொரோனா வைரஸில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அவர்களை சுய தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்கிக் கொண்டிருக்கிறது அங்கு இதுவரையில் 7,10,021 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் 37,158 மக்கள் பலியாகியுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,000 மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரத்தால் அமெரிக்க வல்லரசே நிலைகுலைந்து போயிருப்பதால் உலக நாடுகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.