Asianet News TamilAsianet News Tamil

3 லட்சத்தை நெருங்கும் கொடூர கொரோனா பலி..! உலக நாடுகள் பேரதிர்ச்சி..!

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 24,46,479 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 46,342 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. 

corona death in world is nearer to 3 lakh
Author
America, First Published May 13, 2020, 7:53 AM IST

கடந்த டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2,92,829 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலகளவில் 43,41,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16,02,412 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நலமடைந்த போதும்  வைரஸ் தாக்கப்பட்டவர்களை தொடர்ந்து தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

corona death in world is nearer to 3 lakh

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 24,46,479 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 46,342 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸால் உலகில் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரையில் 14,08,636 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி 83,425 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு தாக்குபிடிக்க முடியாமல் வல்லரசு அமெரிக்காவே நிலைகுலைந்து போயிருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கோர முகத்தை காட்டி வருகிறது. அங்கு 2,26,463 மக்கள் பாதிக்கப்பட்டு 32,692 பேர் பலியாகியுள்ளனர்.

corona death in world is nearer to 3 lakh

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் திணறி வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios