போறதுக்குள்ள இன்னும் என்னென்ன செய்யப் போகுதோ...!! ஒவ்வொரு நொடியும் மரணம், பீதியில் உறைந்த உலகம்..!!
ஒரே நாளில் 15 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 803 பேர் உயிரிழந்துள்ளனர் , புதிதாக 1,119 பேர் உலக அளவில் உயிரிழந்துள்ளனர் .
இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 14 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது , கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன , உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவு ஏற்படுத்திவிடுகிறது . இதுவரை இந்த வைரசுக்கு உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது . அமெரிக்கா , இத்தாலி , பிரான்ஸ் , ஸ்பெயின் , ஜெர்மனி , இங்கிலாந்து , போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .
அங்கு மட்டும் 5 லட்சத்து 3 ஆயிரத்து 377 பேர் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது , இரண்டாவது இடத்தில் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 849 உள்ளது . உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலியே முதலிடத்தில் உள்ளது . நாளையோ , நாளை மறுதினமோ அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கலாம் என தெரிகிறது. காரணம் இத்தாலியை காட்டிலும் அமெரிக்காவில் உயரிழப்பவர்களன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே ஆகும். இந்நிலையில் உலக அளவில் இந்த வைரசுக்கு சுமார் 17 லட்சத்து 14 ஆயிரத்து 233 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர் . ஒரே நாளில் 15 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 803 பேர் உயிரிழந்துள்ளனர் , புதிதாக 1,119 பேர் உலக அளவில் உயிரிழந்துள்ளனர் .
இந்த வைரஸில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . 12 லட்சத்து 22 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 49 ஆயிரத்து 945 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உலகச் சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது . இந்தியாவைப் பொறுத்தவரையில 7,600 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் , மொத்தத்தில் 249 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 774 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் , சுமார் 6, 577 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவில் உச்ச நிலையை எட்டியுள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது . எனவே இந்தியா, அமெரிக்கா , உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .