உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எணிக்கை 7.46  லட்சத்தை கடந்துள்ளது. இது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்கம் இன்னும் கட்டுக்குள்வராததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்படும் ஊடரங்கால் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக அளவில்  எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக்கொத்தாக தாக்கி வருகிறது. 

இதுவரை இந்த வைரசால்  உலக அளவில்  20,535,522 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை சுமார் 7,46,154 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 13,457,358 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 6,332,010 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உலக அளவில் சுமார் 64,663 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

  

உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் வைராஸ் தொற்றால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை இந்நாடுகள் பிடித்துள்ளன. இதில்  அதிக அளவில் அமெரிக்காவில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 749 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 1 லட்சத்து 3,099 பேரும்,  இந்தியாவில் 46,216 பேரும், ரஷ்யாவில் 15,260பேரும், தென்னாப்ரிக்காவில்  10,751 பேரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுப்பட்டியிலில் 6 வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோவில் 53,929 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.