காங்கோ நாட்டின், கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, கோமா நகரில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வந்த 32 இந்தியர்கள் படுகாயமடைந்தனர், ஒரு குழந்தை உயிரிழந்தது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, “ கோமா நகரின் புறநகரான கெய்சாரோ பகுதியில் இன்று அதிகாலை ஐ.நா. அமைதிப்படையினர் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு மசூதி அருகே அவர்கள் வந்த போது, திடீரென பலத்த சத்தத்துடன் மர்மபொருள் ஒன்று வெடித்து ச் சிதறியது. இதில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்ட 32 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வெடிகுண்டு தாக்குதலில், அமைதிப்படையைச் சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
