உக்ரைன் மீது தொடர் தாக்குதல்... ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்!!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. 

coke and pepsi suspended their business in russia

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இருந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.

coke and pepsi suspended their business in russia

இதனிடையே ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. ஐநா பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம், ஐநா பொதுச்சபை என்று பல மேடைகளில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அண்மையில் பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களது விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தின. ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளன.

coke and pepsi suspended their business in russia

உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வரும் 847 உணவகங்களை மெக்டொனால்டு மூடியுள்ளது. இதனைத்தொடர்ந்து காபி ஹவுஸ் எனும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவில் தங்களது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக கோகோ கோலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் நடந்த இந்த சோகமான நிகழ்வுகளால் மனசாட்சியற்ற விளைவுகளைத் தாங்கும் மக்களுடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இதனால்  ரஷ்யாவில் எங்களது வணிகத்தை நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios