இம்ரான் கானை அசிங்கப்படுத்திய சைனீஸ்..!! துணை அமைச்சரை வைத்து வரவேற்பு.

பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தார். அங்கு அவரை சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் வரவேற்றார். பிரதமர் இம்ரான்வுடன் அமைச்சர் ஷா முகமது குரேஷி, நிதி அமைச்சர் ஷெளகத் தாரின், தகவல் தொடர்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொய்த் யூசுப், வர்த்தக மற்றும் முதலீட்டு ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் ஆகியோர் பிரதமருடன் சென்றுள்ளனர்.

Chinese who made Imran Khan look ugly .. !! Welcome by Deputy Minister. not president

பீஜிங் குளிர்கால  ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை  பாகிஸ்தான் பிரதமர் சீனா  சென்றடைந்தார் அங்கு அவரை அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வு ஜியாங்காவோ வரவேற்றார்  இது பாகிஸ்தான் பிரதமருக்கு நடந்த அவமரியாதையாக கருதப்படுகிறது. 

சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4-ஆம் தேதி  இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிகழ்வின் தொடக்கவிழாவில் 32 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட் ரோஸ் அதானோம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இதற்காக 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புக் குரல்களும் ஒலித்து வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ராஜதந்திர ரீதியாக இதைப் புறக்கணித்துள்ளன.

Chinese who made Imran Khan look ugly .. !! Welcome by Deputy Minister. not president

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டியில் பங்கெடுக்க அணிகளை அனுப்பும் ஆனால் தூதரக ரீதியிலான தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து சீனா தனது எதிரி நாடுகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இங்கு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சில நாடுகள் தூதரக ரீதியாக புறக்கணித்து வருகின்றன. விளையாட்டில் அரசியல் என்பது தவறானது. இந்த புறக்கணிப்புக்கான விலையை அந்த நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என எச்சரித்துள்ளது.2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது போது ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் மேற்கண்ட நாடுகள் சீன ஒலிம்பிக் போட்டியை தவிர்த்துள்ளன. இந்நிலையில்தான் சர்வதேச அளவில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கை காட்ட அதிபர் ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார். அதற்காகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் உள்ளிட்ட 32 நாடுகளின் அதிபர்கள் பிரதமர்கள் சீனா விரைந்துள்ளனர். 

இந்நிலையில்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தார். அங்கு அவரை சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் வரவேற்றார். பிரதமர் இம்ரான்வுடன் அமைச்சர் ஷா முகமது குரேஷி, நிதி அமைச்சர் ஷெளகத் தாரின், தகவல் தொடர்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொய்த் யூசுப், வர்த்தக மற்றும் முதலீட்டு ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் ஆகியோர் பிரதமருடன் சென்றுள்ளனர். இம்ரான் தனது சீன பயணத்தின்போது அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார், பட்டுப்பாதை திட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து முன்னெடுப்பது போன்றவை குறித்தும் பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை சீரழிந்து அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒலிம்பிக் நிகழச்சியை சாக்காக வைத்து சீனாவிடம் 3 பில்லியன் டாலரை பாகிஸ்தான் பிரதமர் கடன் கேட்க உள்ளார் என கூறப்படுகிறது. 

Chinese who made Imran Khan look ugly .. !! Welcome by Deputy Minister. not president

இது குறித்து அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் பட்டுப்பாதை திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சீனா பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ளது. சீனா அதிபர் பாகிஸ்தான் பிரதமரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஜி ஜின்பிங்கை சந்திக்க முடியவில்லை என்றால், சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இம்ரான்கான் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்ரான்கான் கடன் கேட்க வருகிறார் என்பதை அறிந்து சீன அதிபர் அவரை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது அதனால்தான் அவர் இம்ரான்கனே நேரில் வந்து வரவேற்க விமான நிலையம் வரவில்லை என கூறப்படுகிறது. 32 நாடுகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் அணிதிரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்க முயற்சிக்கும் அதேவேளையில் தனது நாட்டிற்கு  விருந்தினராக வரும் மற்றொரு நாட்டின் பிரதமரை சீனா இப்படித்தான் நடத்துவதா என்று விமர்சனம் எழுந்துள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios