சீனக் கப்பல்களின் ஆபத்தான சூழ்ச்சி: பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை அதிர்ச்சி
சீன கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பலை மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் ஆபத்தான முறையில் சுற்றி வளைத்து தாக்கியதாகக் கூறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கான பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை சீனக் கப்பல்கள் தடுத்ததாகவும், ஆக்கிரமிப்பு மற்றும் ஆபத்தான சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சீன கடலோரக் காவல்படையின் (CCG) கப்பல் சனிக்கிழமையன்று மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் (WPS) எஸ்கோடா (சபீனா) ஷோலில் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பலை ஆபத்தான முறையில் சுற்றி வளைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ் நாட்டு மீனவர்களுக்கான பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலை சீன கடற்படைக் கப்பல்கள் தடுத்ததாக பிலிப்பைன்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது, மேலும், சீன கப்பல்கள் ஆக்கிரமிப்பு மற்றும் ஆபத்தான சூழ்ச்சிகளுடன் தங்களை தாக்கியாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு மீன்பிடிப்பு கப்பல் மற்றும் பிலிப்பைனஸ் மக்கள் விடுதலை இராணுவக் கப்பல் ஆகிய இரு கப்பல்களை பல சீன கடலோர காவல்படையின் கப்பல்கள் குறிவைத்து தாக்கியது.
சபீனா ஷோல் அருகே உள்ள கடலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பலுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததாக சீனாவின் கடலோர காவல்படை கூறியது. மேலும். பிலிப்பனைஸ் நாட்டு கப்பல்களை மீண்டும் மீண்டும் ஆபத்தான முறையில் சுற்றி வைளத்து தாக்கியது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.