எல்லைகளை மதிக்காத கொடூரன்..!! கொரோனா குறித்து சீன அதிபர் வெளியிட்ட பயங்கரம்..!!

இந்த வைரஸ் எதிர்த்து,  கூட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதிலும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும்  சீனா தயாராக உள்ளது என்றார்.

chine president xi jin ping express his opinion about corona

கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார் .  அதேபோல் உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் வீழ்ச்சி அடைவதை தடுக்க சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்,  வுகானில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சீன அதிபர்  ஜீ ஜின்பிங் , இவ்வாறு கூறியுள்ளார்,  கொரோனா வைரசை எதிர்த்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள சீனா கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட உலக நாடுகளை அழைக்கிறது .  பொருளாதார மந்த நிலையை சீர்படுத்த சுங்க கட்டணம் ரத்து,   மற்றும் வர்த்தகத் தடைகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டும் என்றார் . 

chine president xi jin ping express his opinion about corona

 உலக அளவில் சுகாதார நெருக்கடியை உருவாகியுள்ள கொரோனாவுக்கு எதிரான போரை நடத்துவதில் உலகம் உறுதியாக இருக்கவேண்டும் என்றார் .  இது எந்த  எல்லைகளையும் மதிக்காத  ஒரு வைரஸ்,  இது அனைவருக்கும் பொதுவான எதிரி ,  இதுவரை உலகம் கண்டிராத உலகளாவிய கட்டுப்பாடு மற்றும் சிகிச்சையில் கட்டமைப்பை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் .  கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுகான் நகரில்  தோன்றிய கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பரவியுள்ளஃது.   இந்த வைரஸ் பரவலைத் தடுக்க உலக மக்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றார் .  இந்த வைரஸை எதிர்த்து வெற்றி கண்டது குறித்த தகவல்களை சீனா மற்றநாடுகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது . 

 chine president xi jin ping express his opinion about corona

இந்த வைரஸ் எதிர்த்து,  கூட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதிலும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும்  சீனா தயாராக உள்ளது என்றார்.  இந்நிலையில் எந்நேரமும் சீனா குர்ஆனை வைரஸ் தொடர்பான அறிவுரைகளை வழங்க தயாராக உள்ளது என்றார் .   அதேபோல உலகளாவிய பொருளாதாரத்தை சீர்படுத்தவும்  சுங்க வரிகளைக் குறைக்கவும் தடைகளை அகற்றவும் தடையின்றி வர்த்தகத்தை எளிதாக்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றார் .  இந்நிலையில் கொரோனா  வைரசால் உலகளவில் 21000 பேர் உயிரிழந்துள்ளதுடன் ,  சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் அடைபட்டுள்ளனர் என தெரிவித்தார் .  இந்நிலையில் கடந்த புதன்கிழமை  தொடங்கி தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக சீனாவில் எந்த ஒரு புதிய உள்ளூர்  வைரஸ் தொற்று  நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை,   இதனால் சீனாவில் இந்த வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார் .

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios