#UnmaskingChina: பேசித் தீர்த்துக்கலாம்... எல்லை தாண்டாதீங்க... இந்தியாவிடம் சீனா வேண்டுகோள்..!

ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ய வேண்டாம். எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று இந்தியாவை சீனா வலியுறுத்தி இருக்கிறது. 

Chinas appeal to India

ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ய வேண்டாம். எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று இந்தியாவை சீனா வலியுறுத்தி இருக்கிறது.

 Chinas appeal to India

இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான முதல் கொடிய மோதல் நிகழ்ந்து பல தசாப்தங்கள் கழித்து தற்போது இமயமலை எல்லையில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. 

திங்கட்கிழமையன்று, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், சீனா தனது தரப்பில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. இந்திய ராணுவ வீரர்கள்தான் எல்லையைத் தாண்டி சீனத் தரப்பை தாக்கியதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். Chinas appeal to India

இதுகுறித்து அவர், ‘’இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு கடுமையான மோதலுக்கு வழிவகுத்ததால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டது. உயிரிழப்பு குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் கூறவிரும்பவில்லை. முன்னணியில் உள்ள வீரர்களை கண்டிப்பாக கட்டுப்படுத்தவும், சட்டவிரோதமாக எல்லையை கடக்க வேண்டாம்.Chinas appeal to India

ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ய வேண்டாம். எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சீனா இந்தியாவை வலியுறுத்துகிறது. எனினும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்னையை தீர்ப்பார்கள். நாங்களும், நிச்சயமாக அடுத்தடுத்து மோதல்களைக் காண விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios