கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் புதிய வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.  இதனால் வுஹானில்  உள்ள சுமார் பதினோரு கோடி பேருக்கும்  வைரஸ் பரிசோதனை செய்ய சீன அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது .  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது தற்போது இது உலகம் முழுவதிலும் உள்ள 180 கும் அதிகமான நாடுகளை கபளீகரம் செய்துவருகிறது .  இந்நிலையில் கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வந்த சீனாவில் மீண்டும் அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கியிருப்பது  சீனாவை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதாவது கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானில்  இந்த வைரஸால் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் சீனா அரசின்  நோய் தடுப்பு நடவடிக்கை மூலம்  அங்கு  வைரஸ் மெல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, 

கிட்டத்தட்ட  11 வாரங்களுக்கும் மேலாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த  வுஹான் ஏப்ரல் 8 ஆம் தேதி திறக்கப்பட்டது .  சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அந் நகரம் செயல்படத் தொடங்கியது .  அங்கே பள்ளிகள் திறக்கப்பட்டன, வணிக வளாகங்கள் மெதுவாக இயங்கத் தொடங்கின ,  பொதுப் போக்குவரத்து மீண்டும் செயல்பட தொடங்கியது ,  மக்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார் இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சீனாவில் எந்தவிதமான புதிய வைரஸ்  தொற்றும் ஏற்படவில்லை இந்நிலையில் திடீரென ஒரு குடியிருப்பு வளாகத்தில் சிலருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சுமார் 89 வயதுடைய நபர் மூலம் ஐந்து பேருக்கு  தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , இதனையடுத்து சீனாவின் அதிகாரமிக்க பொலிட்பீரோ நிலைக் குழு உறுப்பினர்கள் மீண்டும் ஏற்பட்டுள்ள தொற்று குறித்து ஆலோசித்தனர் , இதில் வுஹானில் நகரில்  உள்ள சுமார்  11 கோடி  பேருக்கும் வைரஸ் பரிசோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

 

அதை வெறும் 10 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும்  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . அதாவது  ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி சோதனை மேற்கொள்வது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை நண்பகல் சோதனையை திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ,   ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகையின் அளவு , மற்றும் மாவட்டத்தில்  நோய்த்தொற்று எந்த அளவிற்கு இருக்கிறது அல்லது இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த திட்டத்தை செயல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கு " 10 நாள் போர் " என்று அறிவித்துள்ள சீனா ,  மக்கள்  அதிக நெரிசல் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதிக்க வேண்டும் எனவும் வயதானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது .  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த சுகாதார அதிகாரிகள் ஒரு முழு நகரத்தையும் சோதனை செய்வதென்பது  சாத்தியமற்றது ,  மற்றும் அதற்கு அதிக செலவு ஆகக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார், 

அதுமட்டுமின்றி வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குனர் பெங் ஜியோங், அனைவரையும் சோதிப்பதற்கு மாற்றாக  பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மற்றும் அவர்களுடன்  தொடர்புடைய நபர்களை குறிவைத்து சோதிக்கலாம் எனவும் அதேபோல் மக்கள்தொகையில் ஏற்கனவே 3 லிருந்து 5 மில்லியன் பேர் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ஆறு முதல் எட்டு மில்லியன் மக்களை மட்டும் அடுத்த பத்து நாட்களுக்கு சோதிக்கலாம் என தெரிவித்துள்ளார் .  இன்னும் பலர் வுஹான் நகரத்தை திறப்பதற்கு  முன்னரே இந்த பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் .  ஆனாலும் வுஹான்  நகரம் முழுவதிலும் உள்ள 11 கோடி பேரையும் பரிசோதிக்க வேண்டும் என்பதில் சீன அரசு உறுதியாக உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன  . தற்போது வரையில் சீனாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,919 ஆக உள்ளது , இதுவரை  சுமார்  4633 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .