Asianet News TamilAsianet News Tamil

தங்களால் வந்த வைரசை தாங்களே கொல்ல முடிவு...!! அமெரிக்காவை காட்டிலும் மருந்து கண்டுபிடிப்பில் வேகமெடுத்த சீனா..

இதற்கிடையில் சீனாவின்  ஆன்டிவைரல் சிகிச்சையான கிலியட் சயின்சஸ் ரெமெடிவிர் ஏற்கனவே ஆசியாவில் மருத்துவ பரிசோதனைகளின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது 

china very speed to invention for vaccine for corona and start 1st level test
Author
Delhi, First Published Mar 23, 2020, 1:02 PM IST

எம்.ஆர்.என்.ஏ -1273  எனப்படும் உலகின் முதல்  வைரஸ்  தடுப்பூசியில் முதற்கட்ட பரிசோதனையை  தொடங்கிள்ளதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் சீனாவும் தடுப்பூசி ஆய்வில் களமிறங்கியது .  தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளதாக சீனாவும் தற்போது அறிவித்துள்ளது . சீனாவின் வுஹானில் வெடித்த சீனா வைரஸ் இதுவரை 171 நாடுகளுக்கு பரவியுள்ளது.  இந்த வைரஸால் குறைந்தபட்சம் 14 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்துள்ளனர் .  தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதால் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. 

china very speed to invention for vaccine for corona and start 1st level test

இந்நிலையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டின் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் ,  சீன ராணுவ விஞ்ஞானிகளை கொண்டு சீன வைரஸுக்கு தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது .  இந்நிலையில் அதற்கான முதற்கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளதாக அது தெரிவித்துள்ளது .  இந்நிலையில் உலக அளவில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 797 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்த மருந்து பரிசோதனை இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இந்நிலையில் 18 வயது முதல் 60 வயது கொண்ட வுஹான் நகரைச் சேர்ந்த தன்னார்வலர்களை  தேர்ந்தெடுத்து சீனா  முதற்கட்டமாக அவர்களுக்கு சோதனை தடுப்பூசி மருந்தை வழங்க தொடங்கியுள்ளது. 

china very speed to invention for vaccine for corona and start 1st level test

இந்நிலையில் சீனாவின் தேசியவாத குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரையில் ,  ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பது சீனாவின் மிகப்பெரிய போராட்டம் எனவும் முழுமையான தடுப்பூசியை கண்டுபிடிக்க சில காலம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்டா இன்க்கில் உருவாக்கிய தடுப்பூசி கிடைப்பதற்கு இன்னும் ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதற்கிடையில் சீனாவின்  ஆன்டிவைரல் சிகிச்சையான கிலியட் சயின்சஸ் ரெமெடிவிர் ஏற்கனவே ஆசியாவில் மருத்துவ பரிசோதனைகளின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது  உள்ளது இது  சீனா வைரஸின் நோய்க்கு சிகிச்சை அளிப்பதில்  சிறப்பாக செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . இது படிப்படியான மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும்,   இந்த வகை மருந்து சீன வைரசுக்கு ஒரு  நம்பிக்கைக்குரிய மருந்தாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios