இந்திய ராணுவத்தின் பராக்கிரமத்தை கேட்டு நடுநடுங்கிப் போன சீனா..!! இந்தியாவின் காலில் விழுந்து சரண்டரானது..!!
நாட்டின் ஒருமைப்பாடே நமது உச்சபட்ச பலமாக்கும், பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, அது விரிவாக்கவாதமாக இருந்தாலும் சரி, இந்தியா இரண்டையும் உறுதியாக எதிர்த்து போராடி வருகிறது.
அரசியல், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், வேறுபாடுகளை கலைந்து இரு நாடுகளுக்கும் இடையே நடைமுறை ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இருதரப்பு உறவுகளில் நீண்ட கால வளர்ச்சியை பாதுகாப்பதற்கும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மோடியின் சுதந்திரதின உரைக்குப் பின்னர் சீனா இவ்வாறு கூறியுள்ளது.
இந்திய சீன எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15-ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளும் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வந்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது.
அதேநேரத்தில் இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டன. அதேநேரத்தில் ராணுவ ரீதியிலும் தூதராக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் பதற்றம் நிறைந்த கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும், பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க மறுத்து வந்தது, அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்திற்கு சீனா முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என இந்திய தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆவேசமாக உரையாற்றினார். அதில், பாகிஸ்தான் எல்லை தொடங்கி, சீன எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மை குறிவைக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு புரியும் மொழியிலேயை நமது பாதுகாப்பு படையினர் பதில் அளித்து வருகின்றனர்.
நாட்டின் ஒருமைப்பாடே நமது உச்சபட்ச பலமாக்கும், பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, அது விரிவாக்கவாதமாக இருந்தாலும் சரி, இந்தியா இரண்டையும் உறுதியாக எதிர்த்து போராடி வருகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு மரியாதை என்பது மிக முக்கியமான ஒன்று, அதை நிலைநாட்ட இந்திய ஜவான்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உலகம் லடாக்கில் கண்டது என பிரதமர் கூறினார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கேட்டோம், இந்தியா-சீனா இருநாடுகளும் நெருங்கிய நாடுகள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் வளர்ந்து வரும் நாடுகள். நமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி இரு நாட்டு மக்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, செழிப்புக்கும் துணை புரியும் என்றார். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது, ஆதரிப்பது, இருநாடுகளின் நீண்டகால நலன்களுக்கு உதவும் என்றார். எனவே இரு நாட்டு எல்லைப் பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும், இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.