கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பு தகவல்களை திருடும் சீனா... அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி, மருந்துகளை தயாரிக்கும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவுதுறை குற்றம்சாட்டி உள்ளது. 
 

China steals vaccine product information for Corona ... US intelligence shock report

கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி, மருந்துகளை தயாரிக்கும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவுதுறை குற்றம்சாட்டி உள்ளது. 

கொரோனா தொற்றுக்கு அமெரிக்கா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சீனாவும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது. இந்தத் தடுப்பூசியை யார் முதலில் தயாரிப்பது என்பதில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.  China steals vaccine product information for Corona ... US intelligence shock report

இதுகுறித்து நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டதளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் இணைய பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஆரோக்கிய நிபுணர்,  டேவிட் ஃபிட்லர் கூறும்போது, ‘’தடுப்பூசி கண்டுபிடிப்பதில்  அமெரிக்காவிற்கும் -சீனாவிற்கும் இடையில் பதற்றம் காணப்படுகிறது. சீனா முதல் தடுப்பூசியை தயாரிக்க வேண்டுமானால் சீனா தடுப்பூசியை புவிசார் அரசியல் அடிப்படையில் ஆயுதமாக்கும் என்று அமெரிக்கா கவலைப்படுகிறது எனக்கூறியுள்ளார். 

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி தகவல்களை  சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியை உருவாக்க அரசும், தனியார் நிறுவனங்களும் போட்டியிடுவதால், சீன ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 China steals vaccine product information for Corona ... US intelligence shock report

ஆனால் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். ’’கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழிநடத்துகிறோம். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சீனாவை வதந்திகள் மற்றும் அவதூறுகளால் குறிவைப்பது ஒழுக்கக்கேடானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

China steals vaccine product information for Corona ... US intelligence shock report

ஈரான், வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அரசாங்க ஆதரவுடைய ஹேக்கர்கள் தொற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளை குறிவைப்பது தொடர்பான எச்சரிக்கை இது. கடந்த வாரம்  இங்கிலாந்தும், அமெரிக்காவும் வெளியிட்ட கூட்டு செய்தியில்  கொரோனா வைரஸ் ஆய்வில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களுக்கு எதிரான இணைய தாக்குதல்கள் அதிகரிப்பதாக எச்சரித்தன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios