கொரோனா வைரஸ் நோயாளிகளை எப்படி காப்பற்ற வேண்டும்..!! சிகிச்சை முறைகளை சொல்லிக் கொடுத்த சீனா..!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 104 நோயாளிகளில் 78 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் ,
கொரோனா தாக்குதலிலிருந்து சீனாவை காப்பாற்றுவது எப்படி இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி என்பது குறித்த நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறை கையேட்டை சீனா வெளியிட்டுள்ளது . கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்தும் அது வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் சீனாவின் சுகாதார அமைச்சகம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி உள்ளது . உலகையே இந்த வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இதுவரை சுமார் 8 ஆயிரத்து 944 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .
சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 766 பேருக்கு இந்த வைரஸால் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 84 ஆயிரத்து 376 சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என சீனா தகவல் வெளியிட்டுள்ளது . இதில் தற்போது இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளது , இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நாடுகளுடன் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக சீன மருத்துவமனை ஒன்று கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைமுறை குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த கையேட்டை சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மருத்துவ ஊழியர்கள் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
சீனாவின் சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் எழுதப்பட்ட இந்த கையேடு சீன மருத்துவமனைகளில் கடந்த இரண்டு மாதகாலம் நடைபெற்ற சிகிச்சை அனுபவத்தை விளக்குகிறது . கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 104 நோயாளிகளில் 78 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் , எனினும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதால் நோயாளிகள் உயிரிழப்பு ஏற்பட்டதில்லை என்பது இந்த மருத்துவமனையின் பெருமைக்குரிய தகவலாகும் . அத்தகைய மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த கையேடு கரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .