சீனாவை துண்டாட  நினைப்பவர்கள் எலும்பும் சதையுமாக  சிதறிப்போவார்கள்  என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் இரண்டு நாள் சுற்றுப்பணத்தை முடித்துக்கொண்டு நேபாளம் சென்றுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் சட்ட மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் மக்கள் போராடி வருகின்றனர்.  இந்த மசோதா மனித உரிமை மீறலுக்கு வித்திடும் என்று அஞ்சிய ஹாங்காங் மக்கள்  போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதுடன். லட்சக்கணக்கில் திரண்டு ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்,  இதில் ஹாங்காங்  விமானச்சேவை முற்றிலுமாக பாதித்ததைத் தொடர்ந்து.  சட்ட மசோதாவை  பின்வாங்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.  ஆனாலும் முழு ஜனநாயகம் தேவை என ஹாங்காங்கில் போராட்டம் தொடர்கிறது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஹாங்காங்கில் அமைதியாக தொடங்கிய போராட்டம் பின் கலவரமாக மாறியது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அது மோதலாகவும் வெடித்தது.  ஹாங்காங்கில் உள்ள பொது போக்குவரத்து நிலையங்கள் அனைத்தும் முடங்கியது. பிறகு  லேசான தடியடி நடத்தி போலீசார் போராட்டத்தை கலைத்தனர். அதில் பொருட்களை வாங்க மார்கெட்டிற்கு வந்த பொது மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த அசாதாரண சூழல்குறித்து  சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

இரண்டு நாள் பயணமாக மாமல்லபுரம் வந்து பின்  நேபாளம் சென்றுள்ள அவர்,  சீனாவை துண்டாட நினைத்தாள் (நினைப்பவர்கள்) எலும்பும் சதையுமாக சிதறிப் போவார்கள் என  கடுமையாக எச்சரித்துள்ளார் அவரின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜி ஜின்பிங் எச்சரிக்கையாள் போராட்டக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.