china lockdown: சீனாவை உலுக்கும் கொரோனா: குவாங்ஷூ நகரம் மூடப்பட்டது: ஒரேநாளில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு
china lockdown; சீனாவில் அதிகரித்துவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் பெரும் தொழில்நகரமான குவாங்ஷூ நகரம் மூடப்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் அந்த நகரில் மட்டும் 26ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சீனாவில் அதிகரித்துவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் பெரும் தொழில்நகரமான குவாங்ஷூ நகரம் மூடப்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் அந்த நகரில் மட்டும் 26ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஒமைக்ரான்
இந்த 26ஆயிரத்து 87 பேரில், 914 பேருக்கு மட்டும அறிகுறிகள் உள்ளன மற்றவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. 2.60 கோடி மக்கள் தொகை கொண்ட குவாங்ஷூ நகரம் அடுத்த 3 வாரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பு
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. அங்கும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதால், ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் மக்களுக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
லாக்டவுன்
குறிப்பாக 2.60 கோடி மக்கள் வசிக்கும் பெரிய தொழில்நிறுவனமான குவாங்ஷு நகரில் கடந்த 24 மணிநேரத்தில் 26 ஆயிரம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளனர். அடுத்த 3 வாரங்களுக்கு லாக்டவுன் நடவடிக்கை அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாங்ஷூ நகரில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் நடத்த நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் 23 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டநிலையில் இந்த வாரத்தில் 26ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்காலிக மருத்துவமனை
குவாங்ஷு நகரில் உள்ள மிகப்பெரிய அருங்காட்சியம் மற்றும் கண்காட்சி நடத்தும் அரங்கு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குவாங்ஷு நகரைச் சேர்ந்த மக்கள் மிகவும் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டும் நகரை விட்டு வெளியேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அநேரம் மீண்டும் நகருக்குள் வருவதற்கு 48 மணிநேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் அளி்த்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை
கொரோனா பாதிப்பு அதிகரித்தபோதிலும் இதுவரை யாரும் உயிரிழந்ததாக எந்தத் தகவலும் இல்லை. குவாங்ஷூ, ஷாங்காய் நகரங்களில் தொற்று வேகமாக அதிகரித்தாலும்உயிரிழப்பு இல்லாதது அதிகாரிகளுக்கு நம்மதியளி்த்துள்ளது.
கெடுபிடி
மக்கள் வீட்டை விட்டு வெளியேறி மளிகைப் பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால்கூட அதிகாரிகளின் கடும் கெடுபிடிகளைச் சந்தித்துதான் செல்கிறார்கள். நோய் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டு விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. தேவையான பொருட்களை ஆன்-லைனில் வாங்கிக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்