இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும், இந்தியாவை ஒருபோதும் சீனா அச்சுறுத்தலாக கருதவில்லை எனவும் சீன வெளியுறவுத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை காரணம்காட்டி 224 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா இந்த அதரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கமடைந்துள்ளது. முன்னதாக ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கொரோனா வைரஸில் சிக்க வைத்துவிட்டு தான்மட்டும் தப்பித்துக் கொண்ட சீனா, வேகவேகமாக பொருளாதாரத்தின் முன்னேறுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. 

அதே நேரத்தில் அண்டை நாடுகளின் எல்லைகளையை ஆக்கிரமிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால்  சீனாவுக்கு பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதே போல் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும்  டிக்டாக் உள்ளிட்ட 59  சீன செயலிகளுக்கு ஏற்கனவே இந்தியா தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை, பப்ஜி வீ சாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மொத்தத்தில் இதுவரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. எல்லையில் சீனா நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா டிஜிட்டல் தாக்குதல் நடத்தியிருப்பது சீனாவை கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்கா சீனா செயலிகளை தடை விதிக்கப் போவதாக கூறி வரும் நிலையில், இந்தியா அதிரடியாக சீனாவின் 224 செயலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்திருப்பது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால்,

சீனாவின் வர்த்தக செய்தி தொடர்பாளர் காவ் பெங் கூறுகையில், சீன நிறுவனங்கள் மீது இந்தியா தவறான நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளது. இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இந்த விஷயத்தில் இந்தியா தனது தவறை சரி செய்ய வேண்டும் என்று நாங்கள்  கூறுகிறோம். வணிக உறவுகள் இருநாடுகளுக்கும் பயனளிக்கும், ஆனால் சரியான சூழல் அவசியம், இந்தியாவின் இத்தடையால் இரு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். அதேபோல் இந்தியாவின் நடவடிக்கை குறித்து இரண்டாவது அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஹூவா சுனியாங் கூறுகையில், இந்தியா ஒருதலைப்பட்சமாக தடை செய்வதன் மூலம் தனது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது எங்கள் நிறுவனங்களுக்கும் இழப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா சொல்லுவதையே இந்தியா செய்கிறதா? அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று கூறிய நாளிலேயே இந்தியா சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக நிற்கின்றன. மேலும் கூறிய அவர், இந்தியாவுடன் சீனாவுக்கு நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகள் இருப்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும், இந்தியாவும் சீனாவும் பண்டைய நாகரிகங்கள், குறுகியகால நன்மைக்காக நடவடிக்கை எடுப்பதற்கு முன் எதிர்காலத்தையும் இந்தியா யோசிக்க வேண்டும்.  நாங்கள் அயலவர்கள் தான், ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ரவீந்திரநாத் தாகூர், சீனாவில் மிகவும் பிரபலமானவர், இதுதவிர யோகா மற்றும் தங்கல் திரைப்படங்களும் சீனாவில் மிகவும் விரும்பப்படுகின்றன. இந்தியா சீனாவுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதை ஒருபோதும் நினைத்து பார்க்க முடியவில்லை. இதை இந்தியா தயவுசெய்து புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.