இந்தியாவை தொட்ட நீ கெட்ட...!! மறைமுகமாக எச்சரித்த அமெரிக்கா ... வாயில் வயிற்றில் அடித்து கதறும் சீனா!!
இந்தியா-சீனா இடையேயான பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளுக்கும் ஏராளமான வழிமுறைகள் உள்ளன, இப்போது இரு நாட்டு எல்லையிலும் ஒட்டுமொத்த நிலைமையும் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளன.
இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியுடன் விவாதித்துள்ள நிலையில், இரு நாட்டுக்கும் இடையே மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என சீனா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்கும் திறன் எங்களிடம் உள்ளது எனவே மூன்றாம் தரப்பினரின் தலையீடு இதில் தேவையில்லை என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அமெரிக்காவுக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களை அடுத்து கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாடுகளும் படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டின் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தனது ராணுவத்தை எல்லையில் குவித்து சீனாவை கண்காணித்துவருகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதாவது பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் 7 நாடுகள் என்ற அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இருந்து வரும் நிலையில், அதன் தலைமைப் பொறுப்பில் அமெரிக்கா உள்ளது. இதற்கிடையில் இந்த அமைப்பில் இன்னும் வேறு சில நாடுகளை இணைத்து விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதில் இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்க்க வேண்டும் எனவும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கு பெற வேண்டுமென பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் தொலைபேசி வாயிலக அழைப்பு விடுத்தார்.
அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதில், இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதில் அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை, இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், இந்தியா-சீனா இடையேயான பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளுக்கும் ஏராளமான வழிமுறைகள் உள்ளன, இப்போது இரு நாட்டு எல்லையிலும் ஒட்டுமொத்த நிலைமையும் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளன.
இருநாட்டுக்கும் இடையே எல்லையில் தகவல் தொடர்பு நல்ல முறையில் இருந்து வருகிறது, மேலும் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்கும் திறன் எங்களிடம் உள்ளது, எனவே இதில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என அவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். மேலும் சீனா, தேசிய பிராந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்கும் எல்லை பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது எனக் அவர் கூறியுள்ளார்.