பளபளக்கும் பனிச்சிற்பங்கள்…கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள்

சீனாவில் உலகப் பிரசித்தி பெற்ற பனிச்சிற்ப திருவிழா தொடங்கியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பனிச் சிற்பங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

சீனாவில் உள்ள ஹர்பின் நகரில், பனிச்சிற்பத்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு வடிவங்களிலான பனிச் சிற்பங்களை சிற்ப வல்லுநர்கள் செதுக்கியுள்ளனர்.

இதில், பைசா நகரத்திலுள்ள சாய்ந்த கோபுரம், கோட்டை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு வடிவங்கள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சிற்பங்கள் வண்ணவிளங்குகளின் ஒளியில் ஜொலிக்கின்றன. இத்திருவிழா நடைபெறும் ஹர்பின் நகரின் தற்போதைய தட்பவெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுற்றுக்கணக்கான பனிச் சிற்பங்கள் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.