கொரோனா பிறப்பிடத்தில் குதுகளிக்கும் மக்கள்...!! வண்ண விளக்குகளால் மின்னும் வுஹான்..!!
இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் இயங்க தொடங்கியுள்ளன , மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரம் பல மாதங்களாக சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு கொரோனா தோற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதால் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளது , மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன சர்வதேச அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரையில் இந்த வைரசுக்கு 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், ஆனாலும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரசின் பிறப்பிடமான வுஹான் நகரம் கடந்த 8 வாரத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நகரம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் அங்கு வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்துள்ளதை அடுத்து தற்போது அங்கிருந்த தடை நீக்கப்பட்டது . அதாவது கடந்த செவ்வாயன்று கொரோனா வைரஸால் சீனாவில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை, மற்றும் நோய் பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சீனா அறிவித்துள்ளது. இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் வசித்து வரும் வுஹான் நகரில் மக்கள் சுதந்திரமாக செயல்பட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் இயங்க தொடங்கியுள்ளன , மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
ஆனாலும் தற்போது ரயில் நிலையங்களில் மக்கள் சமூக விலகளை கடைபிடித்து முகமூடிகளை அணிந்து கொள்ளவேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர் இந்நிலையில் குறைந்த அளவிலான அதாவது 200 விமானங்கள் புதன்கிழமை முதல் உள்நாட்டு சேவையை தொடங்க உள்ளன . அதில் சுமார் பத்தாயிரம் பேர் பயணிக்க வரை பயணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100 புல்லட் ரயில்கள் சேவை தொடங்கியுள்ளன , தொழிற்சாலைகளுக்கும் தடைகள் நீக்கப்பட்டுள்ளன , ஆனாலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் வுஹான் நகரம் இயங்க தொடங்கியுள்ளதால் அதைக் கொண்டாடும் வகையில் பொது இடங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களில் ரயில் நிலையங்கள் வணிக வளாகங்கள் என மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, இரவு நேரத்தில் வுஹான் நகரம் மின் வெளிச்சத்தில் மின்னுகிறது.