சீனாவில் கொடூர வைரஸ் கிருமிகளை பதுக்கிவைக்கும் கிடங்கு..!! அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
மிகக்கொடூரமான வைரஸ்களை பதுக்கி வைக்கும் கிடங்குகளை சீனா வைத்துள்ளது என்றும் அவற்றை ஆயுதமாகவும் சீனா பயன்படுத்துவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது .
மிகக்கொடூரமான வைரஸ்களை பதுக்கி வைக்கும் கிடங்குகளை சீனா வைத்துள்ளது என்றும் அவற்றை ஆயுதமாகவும் சீனா பயன்படுத்துவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது . சீனாவின் வுகானால் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இந்த வைரசுக்கு இதுவரையில் 7லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தையும் கடந்துள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து சீனாவின் மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறது .
அமெரிக்காவை குறிவைத்து சீனா நடத்திய பயோ வார் இது எனவும் குற்றம்சாட்டியது , அதுமட்டுமல்லாமல் சீனாவால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு சீனா நிச்சயம் விலை கொடுத்தே ஆகவேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் கொரோனா வைரசை சீன வைரஸ் எனவும் அடைமொழியிட்டு அழைத்து வருகிறது . ஆனால் இக்குற்றச்சாட்டுக்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் , அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் டபள்யூ மோசர் என்னும் எழுத்தாளர் சீனாவின் பிரபல நாளிதழான நியூயார்க் போஸ்ட் நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் . அதில் வுகான் நகரில் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாகவும் அதில் ஆபத்தான கிருமிகளை சீனா வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் . கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ,
கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்களை கையாளும் வகையில் நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் தனது பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் திறனை வலுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது . சீனாவில் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டும் ஸ்டீவன் சீனாதான் இந்த வைரஸ் பரப்பியது என்பதற்கு இதுவே சான்று என குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் சீனாவில் நடந்த ஆலோசனை கூட்டமொன்றில் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் , எதிர்காலத்தில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பிடம் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார் . ஆகவே தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை சீன அதிபர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எழுத்தாளர் ஸ்டீவன் சுட்டிக்காட்டியுள்ளார் .