Asianet News Tamil

சீனாவின் ஆட்டம் நீண்ட நாளைக்கு நீடிக்காது..!! ஜி ஜின் பிங்கை கழுவி ஊற்றிய ஐ.நா முன்னாள் தூதர்..!!

ஆனால் சீனா அதை அடக்க முயற்சிக்கிறது, தைவான்,தென் சீனக்கடல் நாடுகள் மற்றும் இந்தியா மீது சீனா இதுபோன்ற அழுத்தத்தையே செலுத்த முயற்சிக்கிறது. தன்னை வலுவாக காட்ட  சீனா இதையெல்லாம் செய்து வருகிறது.

China game will not last long ,  Former UN ambassador who washed away Ji Jin Ping
Author
Delhi, First Published Jul 29, 2020, 7:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உலக அளவில் சீனா ஒரு தலைமை பாத்திரத்தை வகிக்க விரும்புகிறத என ஐநாவின் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறியுள்ளார். ஜி ஜின்பிங் தலைமையிலான சீனா அண்டை நாடுகளை கொடுமைப்படுத்தி வருகிறது. ஆனால் அது நீண்ட நாளைக்கு நீடிக்காது என அவர் கூறியுள்ளார்.  சிறிய நாடுகளை அச்சுறுத்திக் அதன் மூலம் சீனா தனது பலத்தை காட்ட விரும்புகிறது என்றும்,  தூதர் நிக்கி ஹோலி சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2 மாதத்துக்கு மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.  ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள்,   சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்தியாவும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்ததில் சுமார் 35க்கும் மேற்பட்ட சீனர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.  மற்றொருபுறம் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்,  உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளும் எல்லையிலிருந்து படைகளை பின்வாங்கி வருகின்றன. 

இதனால் தற்காலிகமாக இரு நாட்டுக்கும் இடையேயான பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதை அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வருகிறது. தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற பிராந்தியங்களை சீனா உரிமை கொண்டாடி வருவதுடன். அங்கு அடிக்கடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதுடன், சீனா தனிமைப்படுத்தப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா மீது தொடர்ந்து பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அமெரிக்கா, சமீபத்தில் தனது போர்க்கப்பல்களை தென்சீனக் கடல் பகுதிக்கு அனுப்பி, அங்கு போர் ஒத்திகை நடத்தி காட்டியுள்ளது. தென்சீனக்கடல் தொடங்கி,  கிழக்கு லடாக்வரை சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதை சர்வதேச சமூகம் இனி வேடிக்கை பார்க்காது எனவும் சீனாவை,  அமெரிக்கா எச்சரித்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் அமெரிக்க தூதர்  நிக்கி ஹோலி,  சீனாவை கடுமையாக தாக்கியுள்ளார். 

அவர் கூறியதாவது:- அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனா அண்டை நாடுகள் மீது ஆதிக்கத்தையும், கொடுமைப்படுத்துதலையும் காட்டத் தொடங்கியுள்ளது. ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐநாவில் சீனாவின் நிலைப்பாடு ஆக்ரோஷமாக உள்ளது.  இப்போது அவர்  உலக நாடுகளுக்கு தலைமை பாத்திரத்தை வகிக்க முயற்சிக்கிறார், அதற்காக எல்லா நாடுகளுடனும் அவர் பேச ஆரம்பித்துள்ளார். இருப்பினும் அவரது நடத்தை நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை, ஐநாவில் நான் பணியாற்றிய காலத்தில், சீனா மிகவும் அமைதியாக  இருந்தது. அது திட்டமிட்டு தன் வேலைகளை மட்டும் செய்து வந்தது,  சர்வதேச அளவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க அது பணியாற்றியது. ஆனால் தற்போது அது சிறிய நாடுகளை அச்சுறுத்துவதன் மூலம், தனது பலத்தை காட்ட விரும்புகிறது.  சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் சிறிய நாடுகளை ஆக்கிரமித்து, அவைகளை கைக்குள் வைக்க முயற்சிக்கிறது என சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.  அதேபோல் தனது மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்காத எந்த ஒரு நாடும் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது.  ஹாங்காங்கில் நடப்பதுபோல மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் காலம் வரும். 

ஆனால் சீனா அதை அடக்க முயற்சிக்கிறது, தைவான்,தென் சீனக்கடல் நாடுகள் மற்றும் இந்தியா மீது சீனா இதுபோன்ற அழுத்தத்தையே செலுத்த முயற்சிக்கிறது. தன்னை வலுவாக காட்ட சீனா இதையெல்லாம் செய்து வருகிறது. அதேபோல் சீனாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால் அது அமெரிக்க ராணுவத்துடன் இணைந்துதான் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதை அமெரிக்க நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், சீனாவுக்கு எதிராக எங்கள் ராணுவ முழுவதும் தயாராக இருக்கிறது என்பதையும் அமெரிக்கா பகிரங்கபடுத்த வேண்டும் என்ற அவர்,  ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவை மிகச் சரியானது என பாராட்டியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios