#UnmaskingChina:இயற்கையால் அழியும் சீனா..!! ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..!!
1998ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சீனாவின் மக்கள் தொகையில் 5-ல் ஒரு பகுதியினரை பாதித்தது. அந்தநிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் ஒருவாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான யாங்சி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்கள் அவசரகதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சீனாவின் பல பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல நகரங்கள் நீருக்கடியில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் ஆக்ரமித்து வருவதால் ஏராளமான மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிகளை நோக்கி புலம் பெயர்ந்து வருகின்றனர். சாலைகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பேரழிவு மீண்டும் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்து வருவதால் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 1998ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தையும் தாண்டி தற்போது நீர்நிலைகள் முற்றிலுமாக மூழ்கியுள்ளன. நாடு இரண்டாவது மிகப்பெரிய வெள்ள அபாயத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன நீர்வள அமைச்சகம் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நாட்டில் 433 ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதில் 33 நீர்நிலைகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரி 22.5 மீட்டர் (74 அடி) என்ற தனது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இது 1998-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை விட அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணமான ஜியாங்சியில் உள்ள அதிகாரிகள், அம்மாகாணத்தில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளனர். அண்டை மாகாணமான அன்ஹூயியும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங் மக்களின் உயிர்களையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பதில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான படைவீரர்களை யாங்சோ நதிக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. மேலும், நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் தற்போது அதன் மதகுகள் திறக்கப்பட்டு வெள்ளத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுநோயை தொடர்ந்து தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏற்கனவே சீனா போராடிவரும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் பல வாரங்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளப்பெருக்கு, மண் சரிவு போன்றவற்றால் கிட்டத்தட்ட 28 மில்லியன் மக்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2.24 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 141 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அன்ஹூய் மகாணத்தில், ஹூவாங்சனில் சிக்கியுள்ள குடியிருப்பு வாசிகளை மீட்க படகுகள் விரைந்துள்ளன. வீடுகள் முழுவதும் சேரும் சகதியுமாகவும் இன்னும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் இடிந்து விழுந்தும் வருகின்றன. 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சீனாவின் மக்கள் தொகையில் 5-ல் ஒரு பகுதியினரை பாதித்தது. அந்தநிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் மக்கள் வீடுகளையும், மில்லியன் கணக்கான மக்கள் விவசாய நிலங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையம் 309 மில்லியன் யுவான் நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது.