Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: சொந்த நாட்டு மக்களுக்கே உண்மையில்லாத சீனா..!!துளைத்தெடுக்கும் சீன ஊடகங்கள்...!!

இருநாட்டு தளபதிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது விரைவில் அமைதியை நிலைநாட்டவும் பதற்றத்தை குறைக்கவும் முடியும் என்று இருநாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றார். 

china external afire minister jawo ligiyan press meet
Author
Delhi, First Published Jun 19, 2020, 1:35 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதில் 35 சீனர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே வரலாறு காணாத அளவிற்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார், அவரது செய்தியாளர் சந்திப்பு இந்திய எல்லையில் சீனா செய்த குளறுபடிகளையும், பேட்டை ரவுடித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.  கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

china external afire minister jawo ligiyan press meet

45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது , மரணம் நிகழ்ந்தது உண்மை என ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் இறந்தனர் என்பதை கூறவில்லை. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் பார்வை சீனா மீது திரும்பியுள்ளது. பல்வேறு நாடுகளிடம் அராஜகம் செய்து வந்த சீனா தற்போது இந்தியாவிடம் அதன் பராக்கிரமத்தை காட்ட முயன்றிருப்பது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின்  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான்  இருநாட்டு எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார், ஆனால் கல்வானில் மோதல் ஏன் தொடங்கியது என்பது குறித்து அவர் விளக்கவில்லை, அதே நேரத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதாவது,  இருநாட்டுக்கும் இடையிலான இந்த தீவிரமான பிரச்சினையை  தகுந்த முறையில் தீர்க்க இருநாடுகளும் விரும்புகிறது, இருநாட்டு தளபதிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது விரைவில் அமைதியை நிலைநாட்டவும் பதற்றத்தை குறைக்கவும் முடியும் என்று இருநாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றார்.

china external afire minister jawo ligiyan press meet 

அப்போது இந்த மோதல் ஏன் தொடங்கியது, அது எப்படி ஆரம்பித்தது  என்ற செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை, மேலும் இந்த மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதில் ஏதும் கூறவில்லை. அதுமட்டுமின்றி இந்தோ-சீன எல்லையில் உள்ள நீரோட்டத்தை தடுக்க தாழ்வான ஆற்றின் குறுக்கே சீனா அணை கட்டுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும் ஜாவோ லிஜியான் பதிலளிக்கவில்லை,  சீன தளவாடங்களை இந்தியர்கள் அடித்து நொறுக்க முயன்றபோது கல்வானில் மோதல் தொடங்கியதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கும் ஜாவோ பதில் அளிக்கவில்லை,  இதுவரை எல்லையில் எத்தனை சீனர்கள் உயிரிழந்தார்கள் என்பது குறித்து அவர் நேரடியாக கூறவில்லை, ஆனால் இந்த மோதலில் வீரர்கள் கொல்லப்பட்டதாக பெய்ஜிங் கூறிவருகிறது. மொத்தத்தில் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு இந்திய வீரர்களே காரணமென்று  ஜாவோ கூறியதுடன், இந்த பிரச்சனையில் சரி எது தவறு எது என்பது தெளிவான  உள்ளது என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios