சீனர்களை திருத்திய கொரோனா... நாய் இறைச்சிக்கு தடை... செல்லப் பிராணி லிஸ்டில் சேர்ப்பு..!
சீனாவில் கடந்த பிப்ரவரியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதற்கு காரணம் காட்டு விலங்குகள் சாப்பிட்டால் தான் நோய்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நோய் தொற்று கொரோனாவாக உருவாகி இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்து உயிர் கொல்லியாக உருவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் நாய் இறைச்சிக்கு அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்லப் பிராணி லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது
சீனாவில் கடந்த பிப்ரவரியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதற்கு காரணம் காட்டு விலங்குகள் சாப்பிட்டால் தான் நோய்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நோய் தொற்று கொரோனாவாக உருவாகி இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்து உயிர் கொல்லியாக உருவெடுத்துள்ளது.
சீனாவில் தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கையை மக்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவின் வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புதிய வரைவு வழிகாட்டுதல்களின் படி விளையாட்டு மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கலாம் சர்வதேச அளவில் உணவுக்காக நாயை பயன்படுத்தப்படுவதில்லை. இனி சீனாவிலும் நாயை வெட்டி சாப்பிடக்கூடாது. பன்றிகள், கோழி விலங்குகள் மற்றும் ஓட்டகங்கள் உட்பட 18 விலங்குகள் சாப்பிடுவது குறித்து ஆலோசனைகள் கேட்கப்படும்.
கூடுதலாக ரெய்ண்டர்கள், அல்பாக்காஸ், ஃபெசண்ட்ஸ் தீக்கோழி மற்றும் நரிகள் உள்ளிட்ட 13 சிறப்பு இனங்கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் குறித்த புதிய வரையறை சீன அரசாங்கம் உருவாகியுள்ளதால், சீனாவில் நாய் இறைச்சி விற்பனை நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் குதிரை போன்ற விலங்குகளின் இறைச்சி விற்பனை இருக்காது. மேலும் 13 விலங்குகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது குறித்தும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.