china covid cases:சீனாவை கதறவிடும் கொரோனா: ஷாங்காய் நகரில் 27ஆயிரம் தொற்று: அதிபர் ஜிங்பிங் திடீர் உத்தரவு
china covid cases: சீனாவின் நிதிமுனைய நகரான ஷாங்காய் நகரில் கடந்த 24 மணிநேரத்தில் 27ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், லாக்டவுனை கடினமாக்கவும் அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் நிதிமுனைய நகரான ஷாங்காய் நகரில் கடந்த 24 மணிநேரத்தில் 27ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், லாக்டவுனை கடினமாக்கவும் அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடும் கட்டு்பபாடு
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதிலிருந்து மிகவும் மோசமாகபாதிக்கப்பட்ட நகராக ஷாங்காய் இருந்து வந்துள்ளது. சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸுக்கும் ஷாங்காய் நகரம் இலக்காகி வருகிறது. தற்போது 2.50 கோடி மக்கள் கடும்கட்டுப்பாடுகளுடன் லாக்டவுனில் உள்ளனர்.
ஒமைக்ரான் பரவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் போக்குவரத்து முடக்கம், சப்ளையில் சிக்கல் ஏற்பட்டு பொருளாதாரமும் மந்தமாகியுள்ளது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீண்டும் இயல்புபாதைக்கு கொண்டுவர சீன மத்திய வங்கி விரைவில் சலுகைத் திட்டங்களை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.
வசதிகள் இல்லை
ஷாங்காய் நகரைச் சேர்ந்த மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக வேதனைத் தெரிவித்து வருகிறார்கள். சீனாவின் மருத்துவக் கொள்கையின்படி, யாருக்கேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அறிகுறி இருந்தோ அல்லது இல்லாமலோ இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் தனிமைப்படுத்தும் இடம் மிகவும் மோசமாகவும், சுகாதாரமற்று இருப்பதாகவும் புகார் தெரிவிக்கிறார்கள்.
வீடுகளில் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுகுறித்து சீனாவின் மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
திடீர் உத்தரவு
இதற்கிடையே அதிபர் ஜி ஜிங்பிங் நேற்று சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹெய்னா தீவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கூறுகையில் “ சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். லாக்டவுனை கடுமையாக்க வேண்டும். தற்போகு கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளில்தளர்வுகள் கூடாது. சீனாவைச் சுற்றியுள்ள அனைத்து எல்லைகளையும் மூடவேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
ஷாங்காய் நகரில் செயல்படும் தனிமைப்படுத்தும் முகாம்களின் அவலநிலை குறித்து மக்கள் வேதனையுடன் பகிர்ந்துள்ளனர். அதில் ஷாங்காய் மக்களின் பொறுமை எல்லையை எட்டிவிட்டது என்ற தலைப்பில் ஒரு பிளாக்கில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைக்கு லட்சக்கணக்கில் லைக் அளித்து வரவேற்றுள்ளனர்
வேதனை
தனிமைப்படுத்தும் முகாமில் இருப்போர் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே இடைவெளியுடன் படுக்கை இருக்கிறது. 4 கழிவறைகளை 200 பேர் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது, குளிக்கும் வசதியில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்
ஷாங்காய் நகரில் லாக்டவுன் கடுமையாக கடைபிடித்தபோதிலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது என்பதால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது