இந்தியாவிடம் நாய் குட்டிகள் போல சரண்டரான சீனா - அமெரிக்கா..!! கெத்தா காலரை துக்கிவிட்டு நிற்கும் மோடி..!!
அமெரிக்கா இந்தியாவிடம் அதிக நெருக்கம் காட்டுவதை சகித்துக் கொள்ள முடியாத சீனா தற்போது இந்தியாவுடன் நட்பு பாராட்ட தாமாக முன்வந்துள்ளது .
இந்தியாவுடன் இணைந்து கொரோனா எதிர்கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் , உலகளாவிய இந்த தொற்றுநோயை தோற்கடிக்க இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் , இயற்கையாகவே இரு நாடுகளும் ஒரே மாதிரியான உணர்வு கொண்டவை எனபதால் இந்தியா சீனா இணைந்து செயல்பட வேண்டும் என சீன தூதர் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது லட்சக்கணக்கான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர் . மற்ற நாடுகளைவிட சீனாவில் தோன்றிய இந்த இந்த வைரஸ் , ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலையச் செய்துள்ளது, எனவே அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு சீனாதான் காரணமென அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் சீனாவை பாதிக்கும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது . இதானல் மீண்டும் சீனா அமெரிக்கா இடையே பழையபடி வர்த்தக போர் ஆரம்பமாகியுள்ளது .
எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது . சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைப்புகாட்டிவரும் அமெரிக்கா தெற்காசியாவில் சீனாவுக்கு இணையான வல்லமை கொண்ட இந்தியாவுடன் நட்பு பாராட்டவும் முயற்சித்து வருகிறது .அதன் வெளிப்பாடாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரசுக்கு எதிரான போரை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என அவர் தெரிவித்துள்ளார் . மேலும் பிரதமர் மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே . இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் எனவும் அறிவித்துள்ள அவர் , கொரோனா வைரசுக்கு இந்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாகவும் , கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியின் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
இதற்கிடையில் சீனாவிலிருந்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்க முனைப்பு காட்டி வருகின்றன . இதில் இந்தியா மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது , இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான gilgit-baltistan பகுதியில் ( ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் ) சிந்து நதிக்கு இடையில் தடுப்பணைக்கட்ட பாகிஸ்தானுக்கு நிதி வழங்கி சீனா ஆதரவு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி கடந்த மே 5ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களிடம் சீன ராணுவத்தினர் வேண்டுமென்றே வம்பிழுத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் பகை இந்தியா சீனா இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்து வரும் நிலையில் , அமெரிக்கா இந்தியாவிடம் அதிக நெருக்கம் காட்டுவதை சகித்துக் கொள்ள முடியாத சீனா தற்போது இந்தியாவுடன் நட்பு பாராட்ட தாமாக முன்வந்துள்ளது .
இந்தியாவும் சீனாவும் எழுபதாவது ராஜதந்திர ஆண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் , இந்தியாவுக்கான சீனாவின் தூதர் சன் வீடோங் இந்தியாவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து கோவிட்-19க்கு எதிரான போரில் வெற்றி பெற ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்க வேண்டும் . உலகளாவிய தொற்றுநோயை தோற்கடிக்க ஒரே மாதிரியான உணர்வு மனநிலை கொண்டதும் , ஒரே பாணியில் சவால்களை கடந்து வரும் இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தக் கடினமான நேரத்தில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மிகஅவசியம் என கூறியுள்ளார் . அதேபோல் சீனா தொற்று நோய்க்கு எதிராகப் போராடும்போது இந்திய மக்களிடமிருந்து விலைமதிப்பற்ற ஆதரவைப் பெற்றோம் , இப்போது இந்தியா பிரச்சினையை எதிர் கொண்டுள்ளதால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட சீனா விரும்புகிறது என சன் வீடோங் கூறியுள்ளார் . இது அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவை நண்பனாக்கிக் கொள்ள எடுக்கும் ராஜதந்திர நடவடிக்கையே என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் தெரிவிக்கின்றனர்.