உலகமெல்லாம் பகை, உயிர் பயத்தில் சீனா..!! இந்தியா, அமெரிக்காவை பயங்காட்ட எடுத்த பயங்கர முடிவு..!!
179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது, இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும்,
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீனா தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், சீனா தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 2019 ஐ விட 6.6% அதிகரித்து 179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது, இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும், இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக, பாதுகாப்புத் துறையில் சீனாவின் முதலீடு சற்று குறைந்திருப்பதை காணமுடிகிறது .ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தேசிய வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்புத் துறை செலவினங்களுக்காக 12.68 டிரில்லியன் யுவான் அதாவது (178 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, சீனாவின் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது, அதில் நாட்டின் பிரதமர் லி கெக்கியாங் கொரோனா தொற்றுநோய் காரணமாக, நாடு ஒரு 'நிச்சயமற்ற நிலையில்' சிக்கி வருவதாகவும், பொருளாதாரம் மோசமான கட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்க உதவி செய்வதாக உறுதியளித்த அவர், வரவிருக்கும் சில காலத்திற்கு பொருளாதார வளர்ச்சியின் இலக்கு குறித்து எதுவும் அறுதியிட்டு சொல்வதற்கு இல்லை என கூறினார். பொருளாதார வளர்ச்சிக்கு சீனா எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை என்பது இதுவே முதல் முறையாகும். சீனாவின் பொருளாதாரம் 2020 முதல் காலாண்டில் 6.8% சரிவை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் இராணுவத்தை சீர்திருத்தும் பணிகள் தொடரும் என்று லி கெக்கியாங் கூறினார். "நாங்கள் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்தை மேம்படுத்துவோம். நாங்கள் எங்கள் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களின் செயல் திறனை அதிகரிப்போம், மேலும் நவீன பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தையும் பின்பற்றுவோம்" என்று அவர் கூறினார். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஏன் சீனா இவ்வளவு தொகையை ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கேள்வி எழுகிறது.? தென் சீனக் கடல் மற்றும் சீனா-தைவான் பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள மோதல் ,
தெற்கு மற்றும் கிழக்கு சீன கடற்பகுதியில் ஜப்பான், தைவான், பில்ப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் புருனே உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பகை , ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சியாலும், போராட்டக்காரர்களை ஒடுக்க சீனப் படைகள் தீவிரமாக செயல்பட்டதன் விளைவாக அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவை சீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவியது குறித்து அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவுடனான அதன் உறவு சிதைந்துவிட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கருதுவதால் ஒருவேளை இது இராணுவ மோதலில் போய் முடியும் பட்சத்தில், அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என சீன முயற்சிக்கிறது என பல சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சியாளரான கொலின் கோ, சீனா ஆபத்தில் இருப்பதாக உணர்கிறது மற்றும் விரைவில் அதன் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.
இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு குறைந்த அளவிலான பட்ஜெட் செலவைக் காட்டினால், அது மற்ற நாடுகளுக்கு தவறான சமிக்ஞையாக அமையும் என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு பட்ஜெட்டைப் பொறுத்தவரை சீனா எப்போதும் அதிக நிதி ஒதுக்கும் நாடாக இருந்து வருகிறது . அதை வைத்து பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு எவ்வளவு செலவிடப்படும் என முழுமையாக தகவல்கள் இல்லை, எனவே சீனா உண்மையான புள்ளி விவரங்களை குறைத்து அறிவித்துள்ளது என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். 2020 ஆம் ஆண்டின் சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் கடந்த ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்காகும். அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் கடந்த ஆண்டு 686 பில்லியன் டாலராக இருந்தது. பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் பட்ஜெட்டுக்கு இணையாக நிதி ஒதுக்க சீனா பல ஆண்டுகளாக முயன்று வருவது குறிப்பிடதக்கது.