சீனாவை சிறுகச்சிறுக சித்திரவதை செய்யும் கொரோனா..!! மீண்டும் 41 பேருக்கு வைரஸ் தொற்று..!!
சீனாவில் மீண்டும் 41 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டிருப்பது சீனாவை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.
சீனாவில் மீண்டும் 41 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டிருப்பது சீனாவை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறிய நிலையில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வுஹான் நகரை சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் வைரஸ் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது, இது மீண்டும் சீனாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு மாதத்திற்கும் மேலாக அங்கு மெல்ல மெல்ல பரவி கடந்த மார்ச் மாதம் முதல் வேகம் எடுக்க தொடங்கியது இது அடுத்த சில தினங்களில் சீனா முழுவதும் பரவி ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது . இந்த வைரசுக்கு சீனாவில் 81 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டனர் , சுமார் 3339 பேர் உயிரிழந்தனர் .
சுமார் 77 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், ஆனாலும் தற்போது வரையில் 1089 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , 449 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர் . இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்த சீன அரசு வைரசின் பிறப்பிடமான வுஹான் நகரத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது, தற்போது அந்நகரம் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது , மக்கள் ஆரவாரங்களுடன் இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியுள்ளனர். சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து அங்கு தொடங்கப்பட்டுள்ளது . தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன, ஊழியர்கள் பணிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து விதமான ஆலைகளும் செயல்பட ஆரம்பித்துள்ளன. மெல்ல மெல்ல சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் , தற்போது திடீரென 46 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது .
இதனால் சீனா சற்று சலனம் அடைந்து உள்ளது அதுமட்டுமின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் சீனாவில் தென்பட்டுள்ள இந்த அறிகுறி சீனாவை மட்டுமல்லாது சீனாவை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் உலக நாடுகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது . ஏனெனில் கொரோனா வைரஸ் வேண்டும் மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளதோ என சந்தேகிக்கப்பட வைத்துள்ளது, அதாவது இரண்டாவது சூழ்ச்சியை ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ள கொரோனா மீண்டும் சிங்கப்பூர் சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளை தாக்கக்க வாய்ப்பிருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர் . இதனால் சீனாவில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று இரண்டாவது சுற்று தாக்குதலாக இருக்கக்கூடுமென கவலை கொள்ள வைத்துள்ளது.
எனவே, மீண்டும் சீனா தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது . முறையான சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் , பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது . அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பும் குடிமக்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.