இந்தியா மீது கொலைவெறியில் சீனா.!! அதிரடியாக களத்தில் இறங்கியது..!!
நிலவு ஆராய்ச்சி, சோதனை என்று ஒரு பக்கம் இயங்கிவந்தாலும், மற்றொரு புறம், விண்வெளி ஆராய்ச்சி துறையை இந்தியா வர்த்தக ரீதியிலும் கையாண்டு லாபம் ஈட்டிவருகிறது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் பல நாடுகளுக்கு சொந்தமான சுமார் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது நம் இஸ்ரோ, இதனால் விண்வெளி வணிகச் சந்தையில் இந்தியா தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே இந்தியாவின் விண்வெளி வர்த்தக போட்டியை சமாளிக்கும் நோக்கில், தற்போது சீனாவும் இதில் களமிறங்கியுள்ளது.
விண்வெளித்துறையில் இந்தியாவை சமாளிக்க பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே சந்திராயன் 1 , சந்திராயன் 2 , என நிலவை ஆராயும் திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தி உலக நாடுகளை பிரமிக்கவைத்துள்ளது இந்தியா. தன் கடின உழைப்பின் மூலம் சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கவைத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ... இதனால் விண்வெளித்துறையில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது, பல நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் நிலை உருவாகியுள்ளது. விண்வெளி துறையில் ஆற்றும் சாதனைகளுக்காக இந்தியாவை பல நாடுகள் பாராட்டி வரும் நிலையில் அது சீனாவுக்கு மனக் காய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நிலவு ஆராய்ச்சி, சோதனை என்று ஒரு பக்கம் இயங்கிவந்தாலும், மற்றொரு புறம், விண்வெளி ஆராய்ச்சி துறையை இந்தியா வர்த்தக ரீதியிலும் கையாண்டு லாபம் ஈட்டிவருகிறது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் பல நாடுகளுக்கு சொந்தமான சுமார் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது நம் இஸ்ரோ, இதனால் விண்வெளி வணிகச் சந்தையில் இந்தியா தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே இந்தியாவின் விண்வெளி வர்த்தக போட்டியை சமாளிக்கும் நோக்கில், தற்போது சீனாவும் இதில் களமிறங்கியுள்ளது.
அதற்காக பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏந்தி செல்லும் வகையில் ஒரு புது ரக ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மிக அதிக எடையை தாங்கி செல்லும் வகையில் அந்த ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராக்கெட் திட திரவ எரிபொருளை கொண்டு இயங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுவருகிறது. இதற்காக ஆகும் செலவை அந்நாட்டு மக்களிடம் வரியாக வசூலிக்க சீனா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.