Asianet News TamilAsianet News Tamil

வாலை சுருட்டிக்கொண்டு அமைதியா இரு, அமெரிக்காவை எச்சரித்த சீனா... ஈராக் விவகாரத்தில் கொதிப்பு...!!

சம்பந்தபட்ட அனைத்து தரப்பும் குறிப்பாக  அமெரிக்காவும் இந்த விஷயத்தில்  நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் ,

china advice to america and iraq for peace - regarding american attack on baghdad
Author
Delhi, First Published Jan 4, 2020, 11:44 AM IST

அமெரிக்க ஈரான் இடையே  பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இருநாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.  குர்திஸ்  படையின் தளபதி குவாசி சுலைமான் கொல்லப்பட்ட நிலையில் சீனா இவ்வாறு கருத்து  தெரிவித்துள்ளது .  கடந்தவாரம் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்,  மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது .  அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

china advice to america and iraq for peace - regarding american attack on baghdad

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா இத்தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்ததுடன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார் .  அந்த வகையில் அமெரிக்க விமானப்படை நேற்று  பாக்தாத் விமான நிலையம் அருகே தாக்குதல்  நடத்தியது   அதில் 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ,  இதில் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி குவாசிம் சுலைமான் ,  ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி,  துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் ,  அபு மஹதி , அல் முஹன்திஸூம்  ஆகியோர் கொல்லப்பட்டனர் இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்பமான  சூழல் நிலவி வருகிறது , இதற்கிடையே குர்து  படையின் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவுக்கு நிச்சயம் பதிலடி  கொடுக்கப்படும் என குர்து படைத்தளபதி அறிவித்துள்ளார்.

china advice to america and iraq for peace - regarding american attack on baghdad

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா ,  இருநாடுகளும் நிதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது ,  இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூங் ,   சம்பந்தபட்ட அனைத்து தரப்பும் குறிப்பாக  அமெரிக்காவும் இந்த விஷயத்தில்  நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் , என்றும்  மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க இருதரப்பும் பொறுமையுடன்  இருக்க வேண்டியது  அவசியம் எனவும் சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios