சந்திராயன்-2 திட்டத்தின் மூலம் நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும்  ஆர்பிட்டர்.  நிலவின் புறக் காற்று மண்டலத்தில் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படுத்தக்கூடிய வாயு  இருப்பதை கண்டறிந்துள்ளது.  இது நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

உலக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சந்திராயன்-2 திட்டத்தில்  விக்ரம் லேண்டர் நிலவில்  தரையிறங்கும் நிகழ்வு இஸ்ரோவுக்கு ஏமாற்றத்தை அளித்தது . நிலவில் தரையிறங்கும் வேலையில் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது, சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரைப்பகுதியில் மோதியதால் சிக்னல் துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.   பின்னர் லேண்டரை தேடும்பணியில் சுமார் 14 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிந்தது. லேண்டரை தரையிறக்கியதில் இஸ்ரோ தோல்வியடைந்த நிலையில் நிலவுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஆர்பிட்டரைக் கொண்டு நிலவை ஆராய முடிவு செய்யப்பட்டது.

 

லேண்டர் செய்யவிருந்த  90 சதவிகித பணிகளை  ஆர்பிட்டரைக் கொண்டே செய்யலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.   அதில் நிலவின் புறக் காற்று மண்டலத்தில் ஆர்கான் 40  என்ற வாயு மூலக் கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர உள்ள சேஸ் என்ற கருவி உறுதிசெய்துள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரோ,  ஆர்பிட்டர்  தன் பணியை நிறைவாக செய்து வருகிறது.  அது நிலவின் புறக்காற்று மண்டலத்தை ஆராய்ந்ததில் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படுத்தக்கூடிய வாயுவான ஆர்கன் 40 வாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

 

பூமியில் மிக அரிதாகவே கிடைக்கும் இந்த வாயு நிலவின் புறக் காற்று மண்டலத்தில் இருப்பதை ஆர்பிட்டர் உறுதி செய்துள்ளது.  என தெரிவித்துள்ளது. இது நிலவு ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என இஸ்ரோ பெருமிதம் அடைந்துள்ளது.