உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  WHO-வில் ஆற்றிய  உரை  அதன் நிர்வாகிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியையும் நாட்டிற்கு கௌரவத்தையும் பெற்று தந்துள்ளது.  உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழ தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிரிவு நிர்வாக குழுவின் தலைவராக இந்தியா இருக்க வேண்டுமென ஒருமனதாக முடிவு செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு இம்முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில் , இந்தியா அந்த வைரஸை மிகச் சாதுரியமாக எதிர்கொண்டு வருகிறது . நோய் தடுப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதுடன் அதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கௌரவிக்கும் வகையில்  அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவர் பதவி என்பது , உலக சுகாதார அமைப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது ,மற்றும் அதன் செயல்பாடுகளை கவனித்தல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கொண்டதாகும். ஆண்டுக்கு ஒருமுறை பிராந்திய அளவில் நிர்வாக குழு தலைவர் பொறுப்பு மாற்றப்படும் , முதல் ஆண்டில் இந்தியா தலைவராக செயல்படும் பின்னர் சீனா ,பாகிஸ்தான் ,இலங்கை போன்ற  நாடுகளுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டு தென் கிழக்கு ஆசிய பிரிவு நிர்வாக குழுவின் தலைவராக இந்தியா தான் இருக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது,  அதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உலக சுகாதார அமைப்பின் சுகாதார கூட்டத்தில் நிர்வாக குழு தலைவராக இந்தியா பொறுப்பேற்க 194 நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில்  கௌரவம் மிக்க இந்த பதவி ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது, நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் வீடியோகான்பிரன்சிங் மூலம் உலக சுகாதார அமைப்பு நிர்வாகிகளின் மத்தியில் உரையாற்றினார், அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் காரணமாக இவ்வுலகம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது , இந்தச் சூழலில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதவியின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளேன்,  எதிர்வரும் காலம் சுகாதாரத் துறைக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் ,  ஆனால் அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் எனக்கூறினார். மேலும் கொரோனா  எதிர்ப்புப் போரில்  உலக அளவில் தங்களை அற்பணித்துக் கொண்டு , முன்னணியில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும்  எழுந்து நின்று மரியாதை செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் என  அவர் கூறினார், மேலும் அவருடன் வீடியோகான்பிரன்சிங்கில் இணைந்திருந்த  உலக சுகாதார அமைப்பின் கவர்னர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் உள்ளிட்ட இன்னும் பிற நிர்வாகிகள் எழுந்து நின்று ஹர்ஷ் வர்தன் பேச்சுக்கு கைதட்டினர்.

 

அப்போது பேசிய அவர், " உலக அளவில் கொரோனா தடுப்புப் போரில் முன்னணியில் நின்று பணியாற்றும் நம் மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவமனை மருந்தாளுநர்கள்,  மருத்துவ சுகாதார பணியாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர், விமான பாதுகாப்பு துறை ஊழியர்கள், நமது  ராணுவ வீரர்கள், துணை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும்  அவர்களை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குவோம், அவர்களின் ஈடு இணையற்ற  சேவைக்கு  தலைவணங்குவோம் என கூறினார்.   மேலும் இந்த அமைப்பில் ஒற்றுமையுடன்  இணைந்து செயல்பட உங்களது அன்பும் அரவணைப்பையும்  எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."என அவர் நிகழ்த்திய உரை, உலக சுகாதார அமைப்பின் நிர்வாகிகளை நெகிழ்ச்சியடைய வைத்தது . ஹர்ஷ் வர்தன் பேச்சில் மெய்மறந்த அவர்கள், அவரின் பேச்சுக்கு கை தட்டி ஆரவாரம் செய்தனர்.