கனடாவில் பயங்கர விபத்து.. 5 இந்திய கல்லூரி மாணவர்கள் உடல்நசுங்கி துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Canada Road Accident... 5 Indian Students Killed

கனடாவில் முன்னே சென்ற  டிராக்டர் ட்ரெய்லர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 இந்திய மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

டிராக்டர் ட்ரெய்லர் மீது வேன் மோதல்

கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

5 இந்திய மாணவர்கள் பலி

இதில், 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Canada Road Accident... 5 Indian Students Killed

கனடாவுக்கான இந்திய தூதர் இரங்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர். இருவர் மருத்துவமனையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்தியக் குழு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios