300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.... 23 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் குவிஸ்பிகாஞ்சி மாகாணத்தில் உள்ள அமேசான் மழைக்காடு நகரமான புவேர்ட்டோ மால்டோனாடோவில் இருந்து கஸ்கோ நகருக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, விபத்து தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.